சென்னை: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை உள்பட மாநிலம் முழுவதும் தெருநாய்கள் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக சாலையில் செல்லும் மக்கள் நாய் கடிக்கு ஆளாகி வருகின்றனர். அதனால், இந்த தெருநாய்களை கட்டுப்படுத்துவது யார் என கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில்,நேற்று ( மார்ச் 19ந்தேதி) மட்டும் ஒரே நாளில் திருச்சி மணப்பாறை பகுதியில் 20 பேர் தெருநாயால் கடிக்கப்பட்டு உள்ளதாகவும், கடந்த இரு மாதங்களில் மட்டும், சுமார் 500க்கம் மேற்பட்டோர் தெருநாய்களால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. […]
