நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சேர்ந்தவர் செல்வமணி(47). இவர் பாஜக ஒன்றிய தலைவராக இருக்கிறார். மாலை அணிந்து தனது நண்பர்களுடன் நேற்று சபரிமலை சென்றிருந்தார். சபரிமலையில் சாமி தரிசனம் செய்துவிட்டு நேற்று பழனி முருகனை தரிசனம் செய்வதற்காக வந்துள்ளார். நேற்று மாலை படிப்பாதை வழியாக மலைக்கோவிலுக்கு சென்ற செல்வமணி பத்து ரூபாய் தரிசன கட்டணம் வாங்கி தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்தார். அப்போது அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

இதையடுத்து அவரை மீட்டு திருக்கோயில் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்ககப்பட்ட செல்வமணியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
சபரிமலைக்கு மாலை அணிந்து சாமி தரிசனம் முடித்துவிட்டு பழனி கோவிலில் சாமிதரிசனம் செய்வதற்காக வரிசையில் காத்திருந்த பக்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில தினங்களாக திருச்செந்தூர், ராமேஸ்வரம், தஞ்சாவூர் போன்ற முக்கிய கோவில்களில் பக்தர்கள் உயிரிழந்த நிலையில் தற்போது பழனி கோயிலிலும் பக்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks