பிஎஸ்என்எல் ரூ. 1,499 ரீசார்ஜ் பிளான்: அன்லிமிடெட் காலிங், டேட்டா… எக்கச்சக்க அம்சங்கள்

பிஎஸ்என்எல் ரூ. 1,499 ரீசார்ஜ் திட்டம்: இந்திய அரசாங்கத்தின் தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்கு பல வித மலிவான ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதேபோல் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனமானது விரைவில் 4ஜி (4G) சேவையை அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது பிஎஸ்என்எல் நிறுவனம் 1 லட்சம் 4ஜி தளங்களை இணைக்கும் இலக்கை அடைய மிக அருகில் உள்ளது. 2025 ஜூன் மாதத்திற்கு முன் 1 லட்சம் டவர்கள் அமைக்கும் இலக்கு முடிக்கப்படும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது கூடிய விரைவில் பிஎஸ்என்எல் நிறுவனமானது 4ஜி சேவையை வழங்கிவிடும் என கூறப்பட்டுள்ளது.

இதனிடையே பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களை கவரும் விதமாக மிக அற்புதமான திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இவற்றில் பல நல்ல அம்சங்களும் வசதிகளும் அடங்கியுள்ளது. அதன்படி தற்போது  பிஎஸ்என்எல் ஹோலி தமாகா என்கிற ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த சலுகையானது இன்னும் 11 நாட்களுக்கு மட்டுமே கிடைக்கக்கூடும் அதாவது மார்ச் 31 அன்று இந்த திட்டமானது நிறைவு பெற உள்ளது. மேலும் இந்த திட்டத்தில் பயனர்களுக்கு 365 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது. அதேசமயம் 336 நாள் திட்டத்தில் பயனர்களுக்கு 29 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி வழங்கப்படும். வாருங்கள், BSNL-ன் இந்த மலிவான ரீசார்ஜ் திட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம்…

BSNL Holi Dhamaka continues!

With the ₹1499 plan, enjoy 365 days of unlimited calls, 24GB of data, and 100 SMS per day—because the celebration never stops.

Visit our website for more: https://t.co/OlK8NMwIdK#BSNLIndia #HoliDhamaka #HoliKeRangBSNLKeSang pic.twitter.com/B6e3ejYwFz

— BSNL India (@BSNLCorporate) March 19, 2025

365 நாட்கள் வேலிடிட்டி திட்டம்:
BSNL இன் இந்த ரீசார்ஜ் திட்டமானது ரூ.1,499க்கு வழங்கப்படும். முன்னதாக, இந்த திட்டத்தில் நிறுவனம் 336 நாட்கள் செல்லுபடியை வழங்கி வந்தது. தற்போது நிறுவனம் பயனர்களுக்கு கூடுதலாக 29 நாட்களுக்கு வேலிடிட்டியை அதிகரித்துள்ளது. இந்தத் திட்டத்தில் கிடைக்கும் சலுகைகளைப் பற்றிப் பேசுகையில், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கும் இது பொருந்தும்.

இது தவிர, இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் பயனர்களுக்கு தினமும் 100 இலவச எஸ்எம்எஸ், மொத்தம் 24 ஜிபி அதிவேக டேட்டா போன்ற அம்சங்களை பெறலாம். இந்தச் சலுகையின் முடிவு குறித்து BSNL அதன் X தளத்தில் வழங்கியுள்ளது. எனினும் இந்த திட்டமானது மார்ச் 31, 2025 க்குப் பிறகு, செல்லுபடியாகாது.

ஹோலி தமாகா ஆஃபர்:
இது தவிர, பிஎஸ்என்எல் தனது ரூ.2,399 திட்டத்தில் பயனர்களுக்கு கூடுதல் வேலிடிட்டியை வழங்குகிறது. அதன்படி இந்த திட்டத்தில் பயனர்களுக்கு 395 நாட்கள் வேலிடிட்டி கிடைத்து வந்த நிலையில் தற்போது 425 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படும்.

இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும் பிற நன்மைகளைப் பற்றி பேசுகையில், இதில் இலவச தேசிய ரோமிங், தினமும் 2 ஜிபி அதிவேக டேட்டா மற்றும் 100 இலவச எஸ்எம்எஸ் நன்மைகளைப் பெறலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.