பேட்டரி மன்னன் Oppo F29.. வாட்டர் ப்ரூஃப் போல் டாப் அம்சங்களை பாருங்க

Oppo F29 Series: ஓப்போ ரசிகர்களுக்கு அற்புதமான செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி Oppo F29 Series இல் தற்போது ஒரு முக்கியமான அம்சம் ஒன்று அடங்கியுள்ளது. அது என்ன தெரியுமா? பேட்டரி திறன்! இந்த ஸ்மார்ட்போனில் மீண்டும் மீண்டும் சார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாது. இந்த சக்திவாய்ந்த பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனின் பிற அம்சங்கள் என்ன என்பதை இப்போது பார்ப்போம்.

இந்நிலையில்  தற்போது Oppo நிறுவனமானது F29 தொடரின் கீழ் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் Oppo F29, Oppo F29 Pro ஆகும். இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் IP66, IP68 மற்றும் IP69 மதிப்பீடுகளுடன் லாஞ்ச் செய்யப் பட்டுள்ளது. இதன் காரணமாக, இந்த ஸ்மார்ட்போன்கள் தண்ணீரில் விழுந்தால் கூட, எவ்வித சேதமும் ஏற்படாமல் இருக்கும். இது தவிர, இந்த ஸ்மார்ட்போனில் டஸ்ட் தாக்கமும் ஏற்படாது. அதுமட்டுமின்றி இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் மிலிட்ரி கிரெட் MIL-STD-810H-2022 டிராப் ரெசிஸ்டண்ட் அம்சத்துடன் வருகின்றன.

Oppo F29 ஸ்மார்ட்போன் அறிமுகம்:
Oppo F29 ஸ்மார்ட்போனானது சக்திவாய்ந்த 6500mAh பேட்டரியுடன் வெளியிடப்பட்டுள்ள முதல் ஸ்மார்ட்போன் ஆகும். Oppo F29 பற்றி பேசுகையில், இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வகைகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.23,999 ஆகும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் டாப் வேரியண்டின் விலை ரூ.25,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன்களை நீங்கள் கிளேஷியர் ப்ளூ மற்றும் சாலிட் பர்பிள் வண்ண விருப்பங்களுடன் வருகிறது. இதனிடையே இந்த ஸ்மார்ட்போன் வரும் மார்ச் 27 முதல் விற்பனைகக்கு வருகிறது.

Oppo F29 Pro ஸ்மார்ட்போன் அறிமுகம்:
மறுபுறம் Oppo F29 Pro பற்றிப் பேசுகையில், இந்த ஸ்மார்ட்போன் 8GB RAM + 128GB, 8GB RAM + 256GB மற்றும் 12GB RAM + 256GB என 3 ஸ்டோரேஜ் வகைகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் அடிப்படை வெரியண்ட் விலையைப் பற்றிப் பேசுகையில், இதை ரூ.27,999க்கு வாங்கலாம். மீதமுள்ள இரண்டு வகைகளின் விலை ரூ.29,999 மற்றும் ரூ.31,999 ஆகும். இதனிடையே இந்த ஸ்மார்ட்போனின் விற்பனையானது வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தொடங்கும். இந்த ஸ்மார்ட்போனை ரனைட் ப்ளேக் மற்றும் மார்பல் வைஹைட் வண்ண விருப்பங்களுடன் வாங்கலாம். இந்த போன் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் உள்ளிட்ட முன்னணி ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் விற்பனை செய்யப்படும். 

The wait is over! Pre-order the all-new #OPPOF29Series5G – starting at ₹23,999! Featuring the stunning OPPO Glow design and a tough 360° Armor Body, this smartphone is made to shine and endure.#TheDurableChampion

Pre-order now: https://t.co/I4uZbocao7 pic.twitter.com/oVea3r3ocV

— OPPO India (@OPPOIndia) March 20, 2025

Oppo F29, Oppo F29 Pro இல் என்னென்ன அம்சங்கள் வழங்கப்படும்:
– இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் 6.7-இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகின்றன. 

– ப்ரோ மாடலில் Corning Gorilla Glass Victus 2 ப்ரோடெக்ஷன் வருகிறது.

– Oppo F29 ஸ்மார்ட்போனில் Corning Gorilla Glass 7i உடன் வருகிறது.

-இந்த ஸ்மார்ட்போனின் ப்ரோ மாடல் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 எனர்ஜி செயலியுடன் கிடைக்கும்.

– இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் இரட்டை கேமரா அமைப்பு காணப்படும். ஸ்மார்ட்போனில் 50MP பிரதான கேமரா மற்றும் 2MP இரண்டாம் நிலை கேமரா உள்ளது.

– இந்த ஸ்மார்ட்போனில் செல்ஃபிக்களுக்காக 16MP கேமரா உள்ளது.

– Oppo F29 ஸ்மார்ட்போனில் 6,500mAh பேட்டரி உள்ளது, இது 45W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கிறது. 

இது தவிர, இந்த ஸ்மார்ட்போனின் புரோ மாடலில் 6,000mAh பேட்டரி உள்ளது, இது 80W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கிறது.

https://english.cdn.zeenews.com/static/public/zee-tamil.jpg?fbclid=IwAR0…

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.