மும்பை அணியில் இருந்து பும்ரா விலகல்! அவருக்கு பதில் விளையாடப்போவது இவர் தான்!

ஐபிஎல் 2025 தொடர் இந்த வாரம் சனிக்கிழமை கொல்கத்தாவில் தொடங்குகிறது. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் விளையாடுகின்றன. மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் போட்டியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுகிறது. இந்த போட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற உள்ளது.  துரதிஷ்டவசமாக மும்பை அணியில் உள்ள இரண்டு நட்சத்திர வீரர்கள் இந்த போட்டியில் விளையாட மாட்டார்கள். அவர்கள் வேறு யாரும் இல்லை, கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் பும்ரா தான்.

மேலும் படிங்க: CSK vs MI: அதிக போட்டிகளை வென்று‌ ஆதிக்கம் செலுத்திய அணி‌ எது?

ஹர்திக் பாண்டியா உறுதி

நேற்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பும்ரா விளையாட மாட்டார் என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். காயத்திலிருந்து குணமாகி வரும் பும்ராவிற்கு தேசிய கிரிக்கெட் அகாடமி இன்னும் விளையாடுவதற்கான ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் சென்னை அணிக்கு எதிராக போட்டியில் மட்டுமில்லாமல், அடுத்த சில போட்டிகளிலும் பும்ரா விளையாட மாட்டார் என்று ஹர்திக் தெளிவுபடுத்தியுள்ளார்.

பும்ராவை தாண்டி கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் முதல் போட்டியில் விளையாட மாட்டார், காரணம் அவருக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு நடைபெற்ற கடைசி ஐபிஎல் போட்டியில் ஓவர்களையும் மெதுவாக வீசியதற்காக அவருக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹர்திக் பாண்டியா இல்லாத நிலையில் சூரியகுமார் யாதவ் மும்பை அணியை வழி நடத்த உள்ளார். காயம் காரணமாக பும்ரா விலகியதால் அவருக்கு பதில் மும்பை அணியில் விளையாட போகும் வீரர்கள் யார் என்பதை பற்றி பார்ப்போம்.

பும்ராவிற்கு பதில் இவர்கள் விளையாடலாம்!

முஜீப் உர் ரஹ்மான்

சென்னை மைதானம் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் பும்ராவின் இடத்தில் ஒரு ஸ்பின்னரை விளையாட வைக்க வாய்ப்புள்ளது. ஐபிஎல்லில் இதுவரை 19 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ள ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் முஜீப் உர் ரஹ்மான் ஒரு சிறந்த தேர்வாக இருக்கலாம்.

கார்பின் போஷ்

தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் கார்பின் போஷ் பும்ராவிற்கு பதில் விளையாடலாம். இன்னும் சர்வதேச தொடர்களில் அறிமுகமாக வில்லை என்றாலும், டி20 லீக்குகளில் சாதனை படைத்து வருகிறார். இதுவரை 86 போட்டிகளில் 59 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். போஷ் தனது விக்கெட் எடுக்கும் திறனுக்காக அறியப்படுகிறார்.

வெங்கட் சத்யநாராயண ராஜு பென்மெட்சா

ஆந்திர பிரீமியர் லீக்கில் அசத்திய இளம் வேகப்பந்து வீச்சாளர் வெங்கட் சத்யநாராயண மும்பை அணியின் தேர்வாக இருக்கலாம். 6.15 என்ற எகானமியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருந்தார். ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹார்திக் பாண்டியாவை போல, ஐவரும் அடுத்த நட்சத்திர வீரராக வளம் வர வாய்ப்புள்ளது. மும்பை அணி வித்தியாசமாக யோசித்தால், இவரை பிளேயிங் 11ல் ஆட வைக்கலாம்.

மேலும் படிங்க: இந்த வயதிலும் ஏன் ஐபிஎல் விளையாடுகிறாய்? தோனியிடமே கேட்ட ஹர்பஜன்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.