IPL 2025: கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் மிக ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் ஐபிஎல் தொடர் நாளை மறுநாள் (மார்ச் 22) தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இப்போட்டி கொல்கத்தாவில் கோலாகலமாக தொடங்க உள்ளது. அதேபோல் ஐபிஎல் நடக்கும் 13 மைதானங்களிலும் முதல் போட்டியின் போது நிகழ்ச்சிகள் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
ஆர்ஆர் கேப்டனாக ரியான் பராக்
இந்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடும் முதல் மூன்று போட்டிகளில் கேப்டனாக ரியான் பராக் செயல்படுவார் என சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் மூன்று போட்டியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுடன் விளையாட இருக்கிறது. இப்போட்டிகளில் இளம் வீரர் ரியான் பராக் அணியை வழிநடத்துவார் என சஞ்சு சாம்சன் கூறி உள்ளார்.
மேலும் படிங்க: சாஹல் – தனஸ்ரீ விவாகரத்து வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு! ஜீவனாம்சம் இத்தனை கோடியா?
விரலில் காயம்
முன்னதாக இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரின் போது, சஞ்சு சாம்சனுக்கு விரலில் காயம் ஏற்பட்டது. அவர் அதில் இருந்து தற்போது மீண்டு வந்திருந்தாலும், பேட்டிங் செய்யவே அவர் தயகுதியுடன் இருக்கிறார். விக்கெட் கீப்பிங் மற்றும் பீல்டிங் செய்ய அவர் இன்னும் தகுதி பெற வில்லை என மருத்துவக்குழு அறிவுறுத்தி உள்ளது.
இதன் காரணமாக சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக இம்பேக்ட் வீரராக களம் இறக்கப்படுவார் என கூறப்படுகிறது. அதேபொல் முழு தகுதி அடைந்த உடன் அவர் கேப்டனாக அணியை வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இளம் ரியான் பராக் உள்ளூர் போட்டிகளில் அசாம் அணிக்கு கேப்டனாக இருந்துள்ளார். இந்த அனுபவத்தின் மூலம் அவர் ராஜஸ்தான் அணியை வழிநடத்த இருக்கிறார். 23 வயதான ரியான் பராக், விராட் கோலிக்கு பிறகு ஐபிஎல் வரலாற்றில் இளம் வயதில் கேப்டனான வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் கணிக்கப்பட்ட பிளேயிங் 11
யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (இம்பேக்ட் பிளேயராக இறங்க வாய்ப்பு), நிதீஷ் ரானா, ரியான் பராக் (கேப்டன்), துருவ் ஜுரல், ஷிம்ரன் ஹெட்மயர், சுபம் துபே, வனிந்து ஹசரங்க, ஜோஃப்ரா ஆர்ச்சர், மகேஷ் தீக்ஷனா, சந்தீப் சர்மா.
மேலும் படிங்க: இந்த ஐபிஎல் தொடரில் ரொம்ப டேஞ்சரான டீம் எது தெரியுமா? மும்பை, பஞ்சாப் இல்லை