ஹைதராபாத்: 2025-26 வருவாய் ஆண்டின் நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) தெலங்கானா மாநில நிதி அமைச்சர் பட்டி விக்ரமார்க்கா சட்டப்பேரவையில் நேற்று ரூ.3,04,965 கோடியில் தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட்டுக்கு எதிர்கட்சியின் செயல் தலைவர் கே.டி ராமராவ் உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த பட்ஜெட் குறித்து கே.டி. ராமாராவ் பேசும் போது, “விவசாயிகளுக்கு தேர்தல் வாக்குறுதியின் படி, விவசாய கடன் தள்ளுபடி செய்யவில்லை. தெலங்கானா அரசு 36 சதவீத கிருஷ்ணா நீரை உபயோகப்படுத்தி கொள்ளலாம். அதனை ரேவந்த் ரெட்டி செய்வதில்லை” என கண்டனம் தெரிவித்துள்ளார்.