ரெனால்ட் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் ஏப்ரல் 1, 2025 முதல் அனைத்து கார்களின் விலையை 2 சதவீதம் உயர்த்துவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வேரியண்ட் வாரியாக எவ்வளவு விலை உயர்த்தப்படும் விபரங்களை தற்பொழுது தெளிவுப்படுத்தவில்லை.
ரெனால்ட் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநரான வெங்கட்ராம் மாமில்லபல்லேவின் கூற்றுப்படி, நிறுவனம் தொடர்ந்து அதிகரித்து வரும் மூலப் பொருட்களின் செலவுகளை ஏற்றுக்கொண்டு வருகிறது. இருப்பினும், தொடர்ச்சியான அதிகரிப்பு இப்போது தயாரிப்பு தரம் மற்றும் புதுமைகளைப் பராமரிக்க விலை உயர்த்துவது அவசியமாக்கியுள்ளது.
இந்தியாவின் பெரும்பாலான ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் தங்களுடைய வாகனங்களின் விலையை 2 முதல் 4% வரை உயர்த்தி வருகின்றன.