1. விண்வெளியில் அதிக நாட்களை கழித்த 2-வது அமெரிக்க வீரர் என்ற சாதனையை சுனிதா வில்லியம்ஸ் படைத்துள்ளார்.
2. சுனிதா வில்லியம்ஸும் பேரி வில்மோரும் விண்வெளியில் 286 நாட்களை கழித்துள்ளனர். அங்கு 12,13,47,491 மைல் தூரம் பயணித்துள்ளனர். 4,576 முறை பூமியை சுற்றி வந்துள்ளனர்.
3. சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்லும் வீரர்கள் 6 மாதங்களுக்கு பிறகு பூமிக்கு திரும்புவது வழக்கம். இதை மிஞ்சும் வகையில் சுனிதாவும் வில்மோரும் 286 நாட்கள் தங்கியிருந்தாலும், தொடர்ச்சியாக அதிக நாட்கள் தங்கியிருந்தவர்கள் பட்டியலில் இவர்கள் 6-ம் இடத்தில் உள்ளனர்.
4. நிக் ஹேக் மற்றும் அலெக்சாண்டர் ஆகிய இருவரும் 171 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்தனர். 7,25,53,920 மைல் தூரம் பயணித்துள்ளனர். 2,736 முறை பூமியை வலம் வந்துள்ளனர்.
5. இதுவரை சுனிதா (3 முறை பயணம்) 608 நாட்களும், வில்மோர் (3 பயணம்) 464 நாட்களும், ஹேக் (2 முறை) 374 நாட்களும் விண்வெளியில் தங்கி இருந்துள்ளனர். அலெக்சாண்டருக்கு இதுதான் முதல் பயணம்.
6. க்ரூ 9 குழுவினர் தங்களுக்கிடையே 150-க்கும் மேற்பட்ட தனித்துவமான அறிவியல் சோதனைகள் மற்றும் தொழில்நுட்ப விளக்கங்களை அளித்துள்ளனர். 900 மணி நேரம் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.
7. சுனிதாவும் வில்மோரும் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து 8 வெவ்வேறு வருகை வாகனங்களைப் பார்த்துள்ளனர்.
8. சுனிதா 2 முறையும் வில்மோர் மற்றும் நிக் ஹேக் ஆகியோர் தலா 1 முறையும் விண்வெளியில் நடந்துள்ளனர்.
9. சுனிதா 62 மணி நேரம் 6 நிமிடங்கள் விண்வெளியில் நடந்துள்ளார். இதன்மூலம் அதிக நேரம் நடந்த முதல் பெண் என்ற சாதனை படைத்துள்ளார். ஒட்டு மொத்தமாக அதிக நேரம் விண்வெளியில் நடந்தவர்கள் பட்டியலில் 4-ம் இடம் பிடித்துள்ளார்.
10. ரூ-9 திட்டம் ஃப்ரீடம் என்று பெயரிடப்பட்ட டிராகன் விண்கலத்தின் 4-வது விமானமாகும். இது முன்பு நாசாவின் ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ-4, ஆக்ஸியம் 2 மற்றும் ஆக்ஸியம் 3 ஆகிய திட்டங்களையும் ஆதரித்தது.
வாசிக்க > சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 4 விண்வெளி வீரர்களும் இயல்பு உடல்நிலையை அடைவது எப்படி?