CSK vs MI IPL Opening Ceremony : சேப்பாக்கத்தில் ஐபிஎல் தொடக்க விழா… பங்கேற்கும் முக்கிய பிரபலங்கள்

CSK vs MI Match IPL 2025 Opening Ceremony at Chepauk : ஐபிஎல் 2025 தொடர் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே மார்ச் 22 ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது. நடப்பு சாம்பயின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டிக்கு முன்பாக பிரம்மாண்டமான ஐபிஎல் தொடக்க விழா கலைநிகழ்ச்சிகள் நடக்க இருக்கிறது. இதில் பாலிவுட் பிரபலங்களான நடிகை திஷா பட்டானி நடனமாட உள்ளார். பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல் இசை நிகழ்ச்சியும் இருக்கிறது. ரசிகர்களை கவரும் வகையில் இந்த கலை நிகழ்ச்சிகளுக்காக பிரம்மாண்டமான ஏற்பாடுகள் ஐபிஎல் நிர்வாகம் செய்து வருகிறது.

இந்த சூழலில் இந்த முறை ஒரே ஒரு மைதானத்தில் மட்டும் ஐபிஎல் தொடக்க விழா கலை நிகழ்ச்சிகளை நடத்தாமல் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் 13 மைதானங்களிலும் முதல் போட்டியின்போது கலைநிகழ்ச்சிகளை நடத்த ஐபிஎல் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. அதன்படி சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும் ஐபிஎல் 2025 தொடரின் தொடக்க விழா கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் மார்ச் 23 ஆம் தேதி இந்த கலைநிகழ்ச்சிகளையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரும் பலம் வாய்ந்த இரு அணிகள் மோதும் இப்போட்டிக்கு முன்பாக நடக்க உள்ள கலை நிகழ்ச்சிகள் மீதும் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

தமிழ் திரையுலகைச் சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் ஒருவர் மற்றும் நடிகர், நடிகைகளிடம் இது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்திருக்கிறது. விரைவில் அவர்கள் யார் என்பதை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளனர். இசை, நடனம் என இரண்டும் சேப்பாக்கம் மைதானத்தில் கலைகட்ட இருக்கிறது. கூடவே தல தோனியின் ஆட்டமும் இருப்பதால் இப்போட்டிக்கு உலகம் முழுவதும் இருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பும் ஆர்வமும் ஏற்பட்டிருக்கிறது.

இப்போட்டியை நேரில் கண்டுகளிப்பதற்கான டிக்கெட் விற்பனை நேற்று தொடங்கி சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்துவிட்டது. இதனால் தொலைக்காட்சி மற்றும் ஜியோ ஹாட் ஸ்டார் ஆகியவற்றில் நேரலையாக கண்டுகளிக்கலாம். ஜியோ சிம் பயன்படுத்துபவர்கள் இலவசமாகவே இந்த போட்டிகளை கண்டு ரசிக்கலாம். மற்ற நெட்வொர்க் சார்ந்த வாடிக்கையாளர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஐபிஎல் போட்டிகளை கண்டுகளிக்க பல சலுகைகளை அந்நிறுவனம் அறிவித்து வருகிறது. 

மேலும் படிங்க: CSK vs MI: அதிக போட்டிகளை வென்று‌ ஆதிக்கம் செலுத்திய அணி‌ எது?

மேலும் படிங்க: இந்த வயதிலும் ஏன் ஐபிஎல் விளையாடுகிறாய்? தோனியிடமே கேட்ட ஹர்பஜன்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.