ஐபிஎல் 18-வது சீசன் வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த தொடரில் சிஎஸ்கே அணி ஆறாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து இருக்கிறது. தோனி விளையாடும் கடைசி தொடர் இதுவாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தோனி குறித்து ஹர்பஜன் சிங் பேசியிருக்கிறார்.

தோனி குறித்து பேசிய ஹர்பஜன் சிங், “சமீபத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் நான் தோனியைச் சந்தித்தேன். நான் அவரிடம் உங்களுக்கு இன்றளவும் கிரிக்கெட் விளையாடுவது கடினமாக இல்லையா? ஏன் இன்னும் ஐபிஎல் மாதிரியானத் தொடர்களில் விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு என்னிடம் பதிலளித்த தோனி, ‘நிச்சயமாக எனக்கு இது கடினமாக தான் இருக்கின்றது.
ஆனால் இதை செய்யும் போது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இந்தப் பயணத்தில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். மாலை நேரத்தில் நான் பேட்டை எடுத்துக்கொண்டு விளையாட சென்று விடுகிறேன். உங்களுக்கு விளையாட வேண்டும் என்ற உத்வேகம் இருக்கும் வரை உங்களால் விளையாட முடியும் என்று சொன்னார்” என ஹர்பஜன் சிங் கூறியிருக்கிறார்.

தொடர்ந்து தோனி குறித்து பேசிய அவர், ” எந்த ஒரு கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்காமல் திடீரென்று ஐபிஎல் போன்ற ஒரு தொடரில் விளையாடுவது என்பது மிகவும் கடினம். ஆனால் தோனி அதை எப்படி செய்ய வேண்டும் என்று மற்றவர்களுக்கு காட்டுகிறார். மற்றவர்களை விட இவர் ஏதோ வித்தியாசமாக செய்கின்றார். மற்ற பவுலர்கள் மீது ஆதிக்கம் செலுத்துகிறார். பயிற்சியில் அதிக பந்துகளை அவர் எதிர்கொள்கிறார். ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு இரண்டு மூன்று மாதத்திற்கு முன்பு பயிற்சியை மேற்கொள்கிறார்” என்று ஹர்பஜன் சிங் தெரிவித்திருக்கிறார்.
வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks