ஐ.பி.எல் வரலாற்றில் தான் வளர்ந்த மும்பை அணியில், வான்கடே மைதானத்தில், தன்னைக் கொண்டாடிய மும்பை ரசிகர்களால் எதிர்கோஷங்களுக்குள்ளான கேப்டன் என்றால் அது ஹர்திக் பாண்டியாதான். ஆனால், அப்படி எதிர்கோஷமிட்ட ரசிகர்களை அதே ஆண்டில் டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தன்னைப் பாராட்ட வைத்தவரும் ஹர்திக் பாண்டியாதான்.

துபாயில் சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணி வென்றதிலும் ஹர்திக் பாண்டியாவின் பங்கு குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப், கடந்த ஐ.பி.எல் சீசனில் சொந்த ரசிகர்கள் செய்த அவமானங்களைக் கடந்து ஹர்திக் பாண்டியா இன்று முன்னேறியிருப்பது பற்றிப் பேசியிருக்கிறார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முகமது கைஃப், “பாண்டியா அந்த வலிகளைத் தனக்குள்ளேயே வைத்துக்கொண்டு முன்னேறியிருக்கிறார். இதுதான் அவரின் கம்பேக் ஸ்டோரி. ஆனால், இது மோசமான பயணம். ரசிகர்கள் அவரை அவமதித்தனர், மக்கள் புறக்கணித்தனர். ஒரு வீரராக அவமானங்களுடன் முன்னேறுவது மிகவும் வேதனையானது.

ஒரு வீரர் அதை எப்போதும் மறக்க மாட்டார். ஒருவரை நீங்கள் புறக்கணிக்கலாம், ஆனால் அவமானப்படுத்துவது சரியானதல்ல. அது, அந்த வீரரை உளவியல் ரீதியாகத் துன்புறுத்தும். அந்த உளவியல் ரீதியான சித்ரவதைதான் பாண்டியாவுக்கு நேர்ந்தது. இவையனைத்தையும் கடந்து, டி20 உலகக் கோப்பையில் அவர் விளையாடினார். இறுதிப்போட்டியில் ஹென்ரிச் க்ளாசெனின் விக்கெட்டை எடுத்தார்.

சாம்பியன்ஸ் டிராபியில் ஆடம் ஸாம்பாவுக்கெதிராக (அரையிறுதியில்) சிக்ஸர்கள் விளாசினார். பேட்டிங்கிலும் பந்துவீச்சில் சிங்கம் போலக் கடுமையாகப் போராடினார். இவரைப்பற்றி ஏதாவது பயோபிக் இருக்குமெனில், அது நிதானமாக இருப்பது, தங்களின் பலம் மீது நம்பிக்கை வைப்பது, கம்பேக் கொடுப்பது என அவரின் கடைசி ஏழு மாதங்கள் சிறந்த எடுத்துக்காட்டாக வீரர்களுக்கு இருக்கும்” என்று கூறினார்.
வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks