IPL போட்டிகளை மொபைலில் இலவசமாக எப்படி பார்ப்பது? Jio, Airtel, Vi பயனர்களுக்கு குட் நியூஸ்

IPL 2025 Matches Live Watch: ஐபிஎல் 2025 போட்டிகள் நேரலை: 20 ஓவர் போட்டி கொண்ட ஐபிஎல் 2025 தொடர் மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. அடுத்த 90 நாட்களுக்கு கிரிக்கெட் பிரியர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தக்கூடிய இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) கோப்பையை வெல்ல மொத்தம் 10 அணிகள் மொத உள்ளன. ஐபிஎல் 2025 தொடருக்கான போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விளையாடப்படும். எனவே ஐபிஎல் போட்டிகளை மொபைலில் இலவசமாகப் பார்ப்பது எப்படி? ஜியோ, ஏர்டெல், வோடபோன்-ஐடியா பயனர்கள் எப்படி தங்கள் நெட்வொர்க்கில் ஐபிஎல் ஆட்டத்தை பார்க்கலாம்? என்ற விவரங்களை தெரிந்துக்கொள்ளுவோம். 

ஐபிஎல் போட்டிகளை இலவசமாகப் பார்ப்பது எப்படி?

ஐபிஎல் 2025 தொடர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (JioHotstar) நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பப்படும். அதேநேரம் ஐபிஎல் போட்டியை ஆன்லைனில் தங்கள் மொபைல் மற்றும் டிவியில் ரசிக்க விரும்பும் பார்வையாளர்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் போட்டிகள் ஒளிபரப்பப்படும். இதுபோன்ற சூழ்நிலையில், ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன்-ஐடியாவின் எந்த ரீசார்ஜ் திட்டங்களில் ஜியோஹாட்ஸ்டார் சந்தா வழங்கப்படுகிறது என்பதை அறிந்து கொள்வது முக்கியம்.

ஜியோ வாடிக்கையாளர்கள் எப்படி ஐபிஎல் போட்டிகளை இலவசமாகப் பார்ப்பது?

ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பே ஜியோ தனது சந்தாதாரர்களுக்கு ஒரு சலுகையை அறிமுகப்படுத்தி உள்ளது. ஜியோ பயனர்கள் ரூ.299 அல்லது அதற்கு மேற்பட்ட திட்டத்துடன் புதிய ஜியோ சிம் இணைப்பை வாங்குவதன் மூலமோ அல்லது குறைந்தபட்சம் ரூ.299க்கு ரீசார்ஜ் செய்வதன் மூலமோ முழு ஐபிஎல் சீசனையும் இலவசமாகப் பார்க்க முடியும். அதாவது அவர்கள் ஜியோஹாட்ஸ்டாரில் ஐபிஎல் போட்டியை இலவசமாகப் பார்க்க முடியும். 

ஏர்டெல் வாடிக்கையாளர்கள் எப்படி ஐபிஎல் போட்டிகளை இலவசமாகப் பார்ப்பது?

ஏர்டெல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களில் எதிலும் ஜியோஹாட்ஸ்டார் சந்தா குறித்து எந்த திட்டமும் இல்லாய். ஆனால் ஏர்டெல் நிறுவனத்தின் பல ரீசார்ஜ் திட்டங்களில் டிஸ்னிஹாட்ஸ்டார் தளத்துக்கான சந்தா வழங்கப்படுகின்றன. டிஸ்னிஹாட்ஸ்டார் மற்றும் ஜியோசினிமா ஆகியவற்றின் இணைப்பால் புதிய ஓடிடி (OTT) தளமான ஜியோஹாட்ஸ்டார் உருவாக்கப்பட்டது. 

இதுபோன்ற சூழ்நிலையில், ரீசார்ஜ் திட்டத்துடன் ஏற்கனவே டிஸ்னி ஹாட்ஸ்டார் சந்தா வைத்திருக்கும் பயனர்கள், தங்கள் மொபைலில் ஐபிஎல் 2025 தொடரை இலவசமாக பார்க்க முடியும்.

வோடபோன்-ஐடியா வாடிக்கையாளர்கள் எப்படி ஐபிஎல் போட்டிகளை இலவசமாகப் பார்ப்பது?

வோடபோன்-ஐடியா நிறுவனம் மூன்று முக்கிய ரீசார்ஜ் திட்டங்களில் ஜியோஹாட்ஸ்டார் சந்தாவை வழங்குகிறது. ரூ.469க்கு VI ரீசார்ஜ் செய்தால் ஜியோஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கும். ரீசார்ஜின் செல்லுபடியாகும் காலம் 28 நாட்கள் ஆகும். இது தவிர, 84 நாட்கள் செல்லுபடியாகும் ரூ.994 VI ரீசார்ஜ் ஜியோஹாட்ஸ்டார் சந்தாவையும் வழங்குகிறது. ரூ.3699 வருடாந்திர ரீசார்ஜ் திட்டத்திலும் ஜியோஹாட்ஸ்டார் சந்தாவை வழங்கப்படுகின்றன. 

ஐபிஎல் 2025 தொடர் எங்கு? எப்பொழுது? எத்தனை நாட்கள் நடைபெறும்?

ஐபிஎல் 2025 தொடர் மார்ச் 22 முதல் தொடங்கி மே 25 வரை நடைபெறும். இந்த காலகட்டத்தில் மொத்தம் 74 போட்டிகள் நடைபெறும். இந்தப் போட்டியில் 10 அணிகள் பங்கேற்கும். இந்தியாவின் 13 நகரங்களில் போட்டிகள் நடைபெறும். 

ஐபிஎல் 2025 தொடரில் பங்கேற்கும் அணிகளின் பட்டியல்

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK), டெல்லி கேபிடல்ஸ் (DC), குஜராத் டைட்டன்ஸ் (GT), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR), லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG), மும்பை இந்தியன்ஸ் (MI), பஞ்சாப் கிங்ஸ் (PBKS), ராஜஸ்தான் ராயல்ஸ் (RR), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB), சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) ஆகிய பத்து அணிகள் அடங்கும்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.