KKR vs RCB IPL 2025: ஆர்சிபி அணிக்கு பெரும் ஆபத்தாக இருக்கப்போகும் 3 கேகேஆர் பிளேயர்கள்

KKR vs RCB preview : ஐபிஎல் 18வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கும் முதல் போட்டியில் ஆர்சிபி அணியுடன் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோத இருக்கிறது. இப்போட்டியில் ஆர்சிபி அணிக்கு பெரும் ஆபத்தாக இருக்கப்போகும் மூன்று கேகேஆர் பிளேயர்களைப் பற்றி தான் இங்கு பார்க்கப்போகிறோம்.

ஆர்சிபி – கேகேஆர் மோதல்

ஐபிஎல் தொடக்கப்போட்டியில் மோதும் இந்த இரண்டு அணிகளில் கேகேஆர் அணி இரண்டு முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இப்போதைய நடப்பு சாம்பியனும் அந்த அணி தான். ஆனால் ஆர்சிபி அணி ஐபிஎல் வரலாற்றில் இதுவரை ஒரே ஒருமுறை கூட சாம்பியன் பட்டம் வெல்லவில்லை. இந்தமுறையாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கனவுடன் ஒவ்வொரு சீசனும் களமிறங்கும் அந்த அணி, இம்முறையும் அதே நம்பிக்கையுடன் களம் காண உள்ளது. ஆனால் இந்த சீசனும் ஆர்சிபி அணிக்கு அவ்வளவு எளிதாக இருக்கப்போவதில்லை. ஏனென்றால் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடரஸ் அணி ஆர்சிபி அணிக்கு முதல் போட்டியிலேயே கடும் சவாலை அளிக்கும். குறிப்பாக அந்த அணியின் மூன்று பிளேயர்கள் ஆர்சிபி அணியின் வெற்றிக்கு மிகப்பெரிய தடையாக இருப்பார்கள்.

வருண் சக்ரவர்த்தி:

வருண் சக்ரவர்த்தி KKR அணியின் முக்கியமான ஸ்பின் பந்து வீச்சாளர். அவரது மிஸ்டரி ஸ்பின் பந்துவீச்சை பேட்ஸ்மேன்கள் புரிந்துகொள்வது கடினம். எந்த நேரத்திலும் விக்கெட்டுகளை கைப்பற்றும் திறன் கொண்டவர். RCB பேட்ஸ்மேன்கள் வருண் சக்ரவர்த்தியிடம் கட்டாயம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவர் சமீபத்தில் சாம்பியன்ஸ் டிராபியில் சிறப்பான பந்துவீசி இந்திய அணி வெற்றி பெற உதவினார். ஐபிஎல் தொடரில் 70 போட்டிகளில் 83 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். RCB அணிக்கு எதிராக 10 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

ஆண்ட்ரே ரஸ்ஸல்:

ஐபிஎல் தொடரில் மிக ஆபத்தான பேட்ஸ்மேன்கள் வரிசையில் இருப்பவர் ஆண்ட்ரே ரஸ்ஸல். இவர் கட்டாயம் RCB அணிக்கு பெரும் சவாலாக இருப்பார். ரஸ்ஸல் மட்டும் அதிரடி ஆட்டத்தை தொடங்கிவிட்டால் அவரை கட்டுப்படுத்துவது கடினம். அதனால் RCB பந்துவீச்சாளர்கள் ரஸ்ஸலை விரைவில் அவுட் செய்ய முயற்சிக்க வேண்டும். இவர் 127 போட்டிகளில் 105 இன்னிங்ஸ்களில் 2,484 ரன்கள் எடுத்துள்ளார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் 174.93 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கிறார். RCB அணிக்கு எதிராக 16 இன்னிங்ஸ்களில் 423 ரன்கள் எடுத்துள்ளார். ரஸ்ஸல் ஐபிஎல்-இல் 115 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். RCB அணிக்கு எதிராக 17 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

ரிங்கு சிங்:

இளம் ஸ்டார் ரிங்கு சிங் KKR அணியின் நம்பிக்கை நட்சத்திரம். கடந்த சில ஆண்டுகளாகவே கேகேஆர் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறியிருக்கும் அவர் கடினமான சூழல்களில் சிறப்பாக பேட்டிங் ஆடக்கூடியவர். இக்கட்டான சூழலில் அதிரடியாக ஆடி ரன்கள் எடுக்கும் திறன் கொண்டவர். RCB பந்துவீச்சாளர்கள் ரிங்கு சிங் விக்கெட் எடுக்காவிட்டால் மேட்ச்சில் பெறுவது கடினம் தான். இதுவரை 46 ஐபிஎல் போட்டிகளில் 30.79 சராசரியில் 143.34 ஸ்ட்ரைக் ரேட்டில் 893 ரன்கள் எடுத்துள்ளார். RCB அணிக்கு எதிராக 5 போட்டிகளில் 33 சராசரியில் 141.43 ஸ்ட்ரைக் ரேட்டில் 99 ரன்கள் எடுத்துள்ளார்.

இந்த மூன்று கொல்கத்தா பிளேயர்களை ராயல் சேலஞ்சர்ஸ் எப்படி சமாளிக்கப்போகிறது என்பதில் தான் அந்த அணியின் வெற்றி இருக்கிறது

மேலும் படிங்க: CSK vs MI: அதிக போட்டிகளை வென்று‌ ஆதிக்கம் செலுத்திய அணி‌ எது?

மேலும் படிங்க: இந்த வயதிலும் ஏன் ஐபிஎல் விளையாடுகிறாய்? தோனியிடமே கேட்ட ஹர்பஜன்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.