அதிரடி ஆட்டத்தை தொடங்கிய BSNL.. Jio, Airtel அலறல்.. அள்ளி தரும் மாஸ் திட்டங்கள்

BSNL Recharge Plan: இந்திய அரசாங்கத்தின் தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்கு பல வித மலிவான ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. ஜியோ, ஏர்டெல் போன்ற நிறுவனத்திற்கு டக்கர் தரும் அளவிற்கு தற்போது பிஎஸ்என்எல் மக்களை கவரும் விதமாக பல ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் படுத்தி வருகிறது. அதுமட்டுமின்றி பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனமானது கூடிய விரைவில் 4ஜி (4G) சேவையை தொடங்க உள்ளது. தற்போது பிஎஸ்என்எல் நிறுவனம் 1 லட்சம் 4ஜி தளங்களை இணைக்கும் இலக்கை அடைய மிக அருகில் உள்ளது. வரும் 2025 ஜூன் மாதத்திற்குள் 1 லட்சம் டவர்கள் அமைக்கும் இலக்கு முடிக்கப்படும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது கூடிய விரைவில் பிஎஸ்என்எல் நிறுவனமானது 4ஜி சேவையை வழங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களை கவரும் விதமாக அற்புதமான திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதனால் மற்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கடுமையான போட்டியாக அமைந்துள்ளது. இந்த புதிய ரீசார்ஜ் திட்டத்தில் 54 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. மேலும் இதில் பயனர்கள் அன்லிமிடெட் காலிங், டேட்டா மற்றும் இலவச SMS போன்ற வசதிகளைப் பெறுவார்கள். இதில் முக்கிய சிறப்பு அம்சம் என்னவென்றால் இது போன்ற திட்டத்திற்கு தனியார் நிறுவனங்கள் 56 தினங்களுக்கு குறைவாகவே வழங்கி வருகிறது. இது தவிர, BSNL BiTV-க்கான இலவச அணுகலையும் இந்த ரீசார்ஜ் திட்டத்தில் வழங்கப் படுகிறது, அதனுடன் பயனர்களுக்கு 400க்கும் மேற்பட்ட நேரடி தொலைக்காட்சி சேனல்களை இலவசமாக வழங்குகிறது. 

BSNL 54 நாட்கள் கொண்ட திட்டம்:
இந்த 54 நாட்கள் மலிவு திட்டத்தின் விலை வெறும் ரூ.347 ஆகும். இதில் பயனர்கள் பல சிறந்த நன்மைகளைப் பெற முடியும். இலவச அழைப்பு, ஒவ்வொரு நாளும் 2 ஜிபி அதிவேக டேட்டா என மொத்தம் 108 ஜிபி டேட்டா வழங்கப்படும். அதனுடன் தினமும் 100 இலவச SMS கிடைக்கும்.

Get more for less with BSNL’s ₹347 plan! Enjoy unlimited calls, 2GB high-speed data per day, 100 SMS daily, and a massive 54-day validity. Stay connected and powered up!

Visit our website for recharge now – https://t.co/OlK8NMwaoc#BSNLIndia #StayConnected #BSNLPrepaid pic.twitter.com/oQWN8lCp2J

— BSNL India (@BSNLCorporate) March 19, 2025

சமீபத்தில், பிஎஸ்என்எல் தனது நெட்வொர்க்கை வலுப்படுத்த 75,000 புதிய 4ஜி மொபைல் கோபுரங்களை நிறுவியுள்ளது, இது அரசு தொலைத்தொடர்பு சேவையின் இணைப்பை பெரிதும் மேம்படுத்தியுள்ளது. அடுத்த சில வாரங்களில் 1 லட்சம் 4G கோபுரங்களை நிறுவும் இலக்கை நிறுவனம் அடையப் போகிறது.

இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் 4G சேவைகளை தொடங்க BSNL தயாராகி வருகிறது. இதனுடன், நிறுவனம் 5G தொழில்நுட்பத்தையும் சோதிக்கத் தொடங்க உள்ளது. வரும் காலங்களில், பயனர்கள் BSNL இன் 4G மற்றும் 5G சேவைகளை அனுபவிக்க முடியும்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.