ஐபிஎல் 2025ல் வரப்போகும் இரண்டாவது பந்து விதிமுறை – இனி சேஸிஸ் ஈஸியா இருக்காது

IPL 2025 New Rules : ஐபிஎல் 2025 தொடரிலும் புதிய விதிமுறைகள் அமலுக்கு வர இருக்கின்றன. ஒவ்வொரு ஐபிஎல் தொடரின்போது சில விதிமுறைகள் நீக்கப்படும் அல்லது புதிய விதிமுறைகள் கொண்டு வரப்படும். அந்தவகையில் இந்த ஆண்டு இரண்டு விதிமுறைகள் கொண்டு வரப்படுகின்றன. அவற்றில் ஒன்று போட்டியின் முடிவையே மாற்றும் வல்லமை கொண்டதாக இருக்கப்போகிறது. அதாவது, பந்து மீது  எச்சில் தடவ விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியிருக்கும் பிசிசிஐ, இந்த ஆண்டு இரண்டாவது பால் விதிமுறையை அமல்படுத்தப்போகிறது. இதுதான் மிக முக்கியமான விதிமுறை ஆகும். போட்டிகளின் முடிவையே மாற்றக்கூடியதாக இருக்கும். மிகப்பெரிய டிவிஸ்ட் இந்த விதிமுறையில் தான் இருக்கிறது.

இரண்டாவது பால் விதிமுறை என்ன?

இரண்டாவது பால் விதிமுறை என்பது இரண்டாவது பேட்டிங் செய்யும்போது பந்துவீசும் அணி 11 ஓவர்களுக்குப் பிறகு வேறொரு பந்தை எடுத்துக் கொள்ளலாம். அதாவது பனியின் தாக்கம் அதிகம் இருந்து, பந்து நழுவிச் செல்வது, வீச முடியாமல் சிரமப்படுவது, கேட்ச் பிடிக்க முடியாமல் போவது போன்ற தவறுகள் நடக்கின்றன. இது பேட்டிங் செய்யக்கூடிய அணிக்கு சாதமாக அமைந்துவிடுகிறது. இதனை தடுக்கவே பிசிசிஐ இரண்டாவது பந்துவிதிமுறையை ஐபில் 2025ல் அறிமுகப்படுத்த இருக்கிறது. 

ஐபிஎல் அணிகள் முறையீடு

இரவு நேரத்தில் நடக்கும் போட்டிகள் பெரும்பாலும் சேஸிங் செய்யும் அணிகளுக்கே சாதமாக இருப்பதாக குற்றச்சாட்டுகளை ஐபிஎல் அணிகள் முன்வைத்தன. இதனை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதுகுறித்து அணிகளின் ஆலோசனைகளையும் நிபுணர்களின் ஆலோசனைகளையும் கேட்டுக்கொண்ட ஐபிஎல் நிர்வாகம் இரண்டாவது பந்து விதிமுறையை கொண்டு வந்திருக்கிறது. இந்த விதிமுறைப்படி 11 ஓவர்களுக்கு மேல் பவுலிங் அணி பந்தை மாற்றவேண்டும் என அம்பயரிடம் கோரிக்கை வைத்தால் அவர் பரிசீலித்து வேறொரு பந்தை மாற்றாக கொடுக்க வேண்டும். இதுவே இந்த விதிமுறை ஆகும்.

சேஸிங் ஈஸி கிடையாது

ஐபிஎல் கொண்டு வந்திருக்கும் இந்த விதிமுறையால் இரவுப் போட்டிகளில் இனி சேஸிங் ஈஸியாக இருக்காது. பவுலிங் செய்யும் இக்கட்டான சூழலில் பந்தை மாற்றும்போது அது போட்டியின் முடிவில் எதிரொலிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. அதனால் இதுநாள் வரை சேஸிங்கில் சிக்சர்களாக விளாசி படம் காட்டிக் கொண்டிருந்த பேட்ஸ்மேன்களுக்கு இனி தான் உண்மையான கச்சேரி இருக்கப்போகிறது. 

மேலும் படிங்க: ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் இல்லை.. இந்த வீரர் தான் கேப்டன்! என்ன காரணம்?

மேலும் படிங்க: சாஹல் – தனஸ்ரீ விவாகரத்து வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு! ஜீவனாம்சம் இத்தனை கோடியா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.