சென்னை: நகராட்சி, மாநகராட்சிகளோடு இணைக்கப்பட்ட ஊராட்சிகளுக்கும் 100 நாள் வேலைதிட்டம் நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் நேரு தெரிவித்தார். மாநகராட்சிகள், நகராட்சிகளோடு இணைக்கப்பட்ட ஊராட்சிகளில் 100 நாள் வேலைத்திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப் பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 14-ந் தேதி தொடங்கியது. அன்று 2025-2026-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். மார்ச் 15-ந் தேதி வேளாண் […]
