Vi top five 5G plans: Vi (Vodafone Idea)நிறுவனத்தின் 5G சேவை நேரலைக்கு வந்துள்ளது. நிறுவனம் தனது பயனர்களுக்காக 5 புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் இனி பயனர்கள் 5G சேவையின் பலன்களைப் பெற முடியும். மேலும் Vi நிறுவனம் பயனர்களுக்காக ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது தவிர, பயனர்கள் 5G தொடர்பான தகவல்களைப் பெற ஒரு மைக்ரோசைட்டையும் நிறுவனம் நேரலையாக்கியுள்ளது. தற்போது, இந்த சேவையின் பலனை மும்பை வாசிகள் மட்டுமே பெற முடியும். இப்போது Vi-வின் 5 சிறந்த திட்டங்களைப் பற்றி காணலாம்.
Vi இன் ரூ.299 5G திட்டம்:
Vi இன் ரூ.299 5G திட்டத்தின் வேலிடிட்டி பற்றி பேசுகையில், இந்த திட்டத்தின் வேலிடிட்டி காலமானது 28 நாட்கள் ஆகும். இது தவிர, பயனர்கள் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் பலனை பெறுவார்கள். அதனுடன் தினமும் 1 ஜிபி அதிவேக டேட்டாவை, 100 இலவச எஸ்எம்எஸ் வசதியையும் பெறுவார்கள்.
Vi இன் ரூ.349 5G திட்டம்:
Vi இன் ரூ.349 5G இந்த திட்டத்தின் வேலிடிட்டி காலமானது 28 நாட்கள் ஆகும். இது தவிர, பயனர்கள் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் பலனை பெறுவார்கள். அதனுடன் தினமும் 1.5 ஜிபி அதிவேக டேட்டாவை, 100 இலவச எஸ்எம்எஸ் வசதியையும் பெறுவார்கள். மேலும், இந்த திட்டத்தின் மூலம் பயனர்கள் அன்லிமிடெட் 5G டேட்டாவை பெறுவார்கள்.
Vi இன் ரூ.365 5G திட்டம்:
Vi இன் ரூ.365 5G திட்டத்தின் வேலிடிட்டி காலமானது 28 நாட்கள் ஆகும். இது தவிர, பயனர்கள் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் பலனை பெறுவார்கள். அதனுடன் தினமும் 2 ஜிபி அதிவேக டேட்டாவை, 100 இலவச எஸ்எம்எஸ் வசதியையும் பெறுவார்கள். மேலும், இந்த திட்டத்தின் மூலம் பயனர்கள் அன்லிமிடெட் 5G டேட்டாவை பெறுவார்கள்.
Vi இன் ரூ.407 5G திட்டம்:
Vi இன் ரூ.407 5G திட்டத்தின் வேலிடிட்டி காலமானது 28 நாட்கள் ஆகும். இது தவிர, பயனர்கள் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் பலனை பெறுவார்கள். அதனுடன் தினமும் 2 ஜிபி அதிவேக டேட்டாவை, 100 இலவச எஸ்எம்எஸ் வசதியையும் பெறுவார்கள். மேலும், இந்த திட்டத்தின் மூலம் பயனர்கள் அன்லிமிடெட் 5G டேட்டாவை பெறுவார்கள். இதனுடன், இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு சன் நெக்ஸ்டின் இலவச சந்தாவையும் வழங்கப்படும்.
Vi இன் ரூ.408 5G திட்டம்:
Vi இன் ரூ.408 5G திட்டத்தின் வேலிடிட்டி காலமானது 28 நாட்கள் ஆகும். இது தவிர, பயனர்கள் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் பலனை பெறுவார்கள். அதனுடன் தினமும் 2 ஜிபி அதிவேக டேட்டாவை, 100 இலவச எஸ்எம்எஸ் வசதியையும் பெறுவார்கள். மேலும், இந்த திட்டத்தின் மூலம் பயனர்கள் அன்லிமிடெட் 5G டேட்டாவை பெறுவார்கள். இந்தத் திட்டத்தின் மூலம், நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு டேட்டா டிலைட் மற்றும் சோனி லிவ் சந்தா வழங்கப்படும்.