IPL 2025 : இந்த ஆண்டு பிளே ஆஃப் செல்லும் நான்கு அணிகள், சிஎஸ்கே போகாது – டிவில்லியர்ஸ் கணிப்பு

IPL 2025, ABD Prediction : ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதற்கு இன்னும் சில மணி நேரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் ஆர்சிபி அணியின் முன்னாள் பிளேயர் ஏபி டிவில்லியர்ஸ் தன்னுடைய பிளே ஆப் கணிப்பை தெரிவித்துள்ளார். அதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் டிவில்லியர்ஸ் தேர்வு செய்திருக்கும் நான்கு பிளே ஆஃப் அணிகளில் எம்எஸ் தோனி விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இடம்பெறவில்லை. 

ஐபிஎல் 2025 தொடர் பிரம்மாண்டமாக தொடங்குவதற்கு இன்னும் சில மணி நேரங்கள் மட்டுமே இருக்கின்றன. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஐபிஎல் 2025 தொடரின் தொடக்க விழா கோலாகலமாக நடக்க இருக்கிறது. அதனைத் தொடர்ந்து முதல் போட்டியில் நடப்பு சாம்பியன்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், விராட் கோலி அங்கம் வகிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோத இருக்கின்றன. நாளை மறுநாள் அதாவது ஞாயிற்றுக்கிழமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத இருக்கின்றன. இந்த சூழலில் டிவில்லியர்ஸ் ஐபிஎல் 2025 குறித்த தன்னுடைய கணிப்புகளை வெளியிட்டிருக்கிறார். 

ஏபி டிவில்லியர்ஸ் பேச்சு

தனது யூடியூப் சேனலில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், ஏபி டிவில்லியர்ஸ் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய நான்கு அணிகளை ஐபிஎல் பிளேஆஃப்களுக்குள் நுழையும் அணிகளாகத் தேர்ந்தெடுத்துள்ளார். அவர் சிஎஸ்கேவை தேர்வு செய்யவில்லை. இதனை குறிப்பிட்டு பேசிய டிவில்லியர்ஸ், தன்னுடைய தேர்வில் நிச்சயம் ரசிகர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் இல்லாததைப் பார்த்து ஏமாற்றமடையக்கூடும் என்றும் கூறியிருக்கிறார். 

டிவில்லியர்ஸ் என்ன சொன்னார்?

அந்த வீடியோவில் டிவில்லியர்ஸ் பேசும்போது, ‘மும்பை இந்தியன்ஸ் அணி பிளேஆஃப்களுக்குள் நுழையும் என்று நான் நினைக்கிறேன்’ என்று கூறினார். இந்த முறை ஆர்சிபி அணியும் பிளேஆஃப்களுக்குள் நுழையும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன், ஏனென்றால் இந்த முறை அணி சமநிலையில் உள்ளது. அடுத்து என்னுடைய கணிப்பில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் பிளேஆஃப்களுக்கு ஒரு போட்டியாளராக உள்ளது. நடப்பு சாம்பியனான KKR அணியும் பிளேஆஃப் பந்தயத்தில் இருக்கிறது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பிளேஆஃப்களுக்குச் செல்லக்கூடிய எனது நான்கு அணிகள் இவைதான் என தெரிவித்துள்ளார்.

CSK பற்றி டிவில்லியர்ஸ்

சிஎஸ்கே பற்றி டிவில்லியர்ஸ் கூறுகையில், ‘ஆம், நான் இதில் சிஎஸ்கேவை தேர்வு செய்யவில்லை. அது ஒரு வலுவான அணி, CSK ரசிகர்கள் ஏமாற்றமடையக்கூடும், ஆனால் நான் இந்த நான்கு அணிகளுடன் மட்டுமே செல்வேன் என தெரிவித்தார். ஆர்சிபி அணியைப் பொறுத்தவரை விராட் கோலி அணியை ஒருங்கிணைக்க வேண்டும். இந்த தொடர் முழுவதும் அவர் கேப்டன் ஆப் தி ஷிப்பாக செயல்பட வேண்டும். பேட்டிங் வரிசையில் எந்த சரிவும் ஏற்படாமல் இருக்க, ஸ்மார்ட் கிரிக்கெட் விளையாடப்பட வேண்டும் என்றும் அந்த அணிக்கு டிவில்லியர்ஸ் அறிவுரை வழங்கியுள்ளார்.

மேலும் படிங்க: ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் இல்லை.. இந்த வீரர் தான் கேப்டன்! என்ன காரணம்?

மேலும் படிங்க: சாஹல் – தனஸ்ரீ விவாகரத்து வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு! ஜீவனாம்சம் இத்தனை கோடியா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.