RCB vs KKR: ஆர்சிபி – கேகேஆர் போட்டி நடைபெறுமா? வெளியான அதிர்ச்சி தகவல்!

கிரிக்கெட் ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஐபிஎல் தொடர் நாளை (மார்ச் 22) தொடங்குகிறது. முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோத உள்ளன. இப்போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டிகாக ரசிகர்கள் பலர் டிக்கெட்களை புக் செய்து காத்துக்கொண்டிருக்கின்றனர். ஆர்சிபி அணியின் போட்டி என்பதாலும் ஐபிஎல்லின் முதல் போட்டி என்பதாலும் இப்போட்டிக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. 

இச்சூழலில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. கொல்கத்தாவில் கடந்த சில நாட்களாகவே அவ்வபோது மழை பெய்து வருகிறது. போட்டியின் முந்தைய நாளான இன்றும் மழை பெய்தது. இதன் காரணமாக இரு அணிகளும் பயிற்சியில் ஈடுபட முடியாத சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில், போட்டி நடைபெறும் நாளான நாளையும் கொல்கத்தாவில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

மேலும் படிங்க: ஏலம் போகாத வில்லியம்சன்… ஆனாலும் ஐபிஎல் தொடரில் களமிறங்குகிறார்… அது எப்படி?

 

அதாவது நாளை (மார்ச் 22) காலை மழை பெய்யும் எனவும் போட்டி தொடங்கும் நேரமான இரவு 7 மணி அளவில் 40 சதவீதம் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அதேபோல் இரண்டாவது இன்னிங்ஸ் அதாவது இரவு 9 மணிக்கு மேல் 65 சதவீதம் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

போட்டி தொடங்குவத்ற்கு முன்பு தொடக்க விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் பாலிவுட் பிரபலம் திசா பதானி நடன கலைஞராகவும் ஸ்ரேயா கோஷல் பாடகியாகவும் பங்கேற்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த நிகழ்ச்சிகளும் திட்டமிட்டபடி நடைபெற வாய்ப்பு குறைவே என கூறப்படுகிறது. ஐபிஎல் தொடரின் முதல் போட்டியே மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்ற செய்தி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இருப்பினும் போட்டி நாளான நாளை வானிலையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட வேண்டும் என ரசிகர்கள் வேண்டி வருகின்றனர். 

இரு அணிக்களுக்கான உத்தேச பிளேயிங் 11

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: குயின்டன் டி காக் (விகீ), சுனில் நரைன், அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), வெங்கடேஷ் ஐயர், ரின்கு சிங், ஆண்ட்ரே ரசல், ரமன்தீப் சிங், ஹர்ஷித் ராணா, ஸ்பென்சர் ஜான்சன், வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி. இம்பேக்ட் வீரர்: அங்க்கிரிஷ் ரகுவன்ஷி.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: விராட் கோலி, பில் சால்ட் (விகீ), ரஜத் படிதார் (கேப்டன்), ஜிதேஷ் சர்மா, லியாம் லிவிங்ஸ்டோன், டிம் டேவிட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், சுயாஷ் சர்மா, ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள். இம்பேக்ட் வீரர்: ராசிக் தார் சலாம்.

மேலும் படிங்க: ரவிச்சந்திரன் அஷ்வின் பெயரில் சாலை.. சென்னை மாநகராட்சி முடிவு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.