ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற கிளாசிக் 350 அடிப்படையில் கிளாசிக் 650 விற்பனைக்கு மார்ச் 27 ஆம் தேதி இந்தியாவில் வெளியிடப்பட உள்ளது. ஏற்கனவே, ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளில் இந்த மாடலை இந்நிறுவனம் விற்பனை செய்து வருகின்றது.
ஏற்கனவே சந்தையில் உள்ள மற்ற 650சிசி மாடல்களிலிருந்து பெறப்பட்ட எஞ்சினை பகிர்ந்து கொண்டுள்ள கிளாசிக் 650ல் 648cc பேரல் ட்வின் எஞ்சின் அதிகபட்சமாக 47 hp பவரை 7100 RPM-ல் வழங்குவதுடன், 4000 RPMல் அதிகப்படியான 52 Nm டார்க்கினை வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப் அசிஸ்ட் கிளட்ச் கொண்டதாக வரவுள்ளது.
கிளாசிக் 350 அடிப்படையிலான டிசைனை பகிர்ந்து கொள்ளுகின்ற பெட்ரோல் டேங்க் உட்பட இருக்கை அமைப்பு என பலவற்றுடன் பல்வேறு இடங்களில் 350சிசி எஞ்சின் கொண்ட கிளாசிக்கின் சாயல் தெரிந்தாலும், சில இடங்களில் பிரீமியம் பாகங்கள் மற்றும் நிறங்களில் தனித்துவமான கவனத்தை ராயல் என்ஃபீல்டு மேற்கொண்டுள்ளது.
100/90-19 மற்றும் பின்புறத்தில் 140/70-R18 பெற்று முன்புறத்தில் டிஸ்க் மற்றும் பின்புறத்திலும் டிஸ்க் பிரேக்குடன் டூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளது. முன்புறத்தில் 43 மிமீ டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷனுடன் பின்புறத்தில் ட்வீன் ஷாக் அப்சார்பரை பெற்றுள்ளது.
நடுத்தர மோட்டார்சைக்கிள் சந்தையில் என்ஃபீல்டுக்கு மிகப்பெரிய பலமாக உள்ள கிளாசிக் வரிசையில் கூடுதலாக சேர்க்கப்பட உள்ள 650 மாடலும் அமோகமான வரவேற்பினை பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், விற்பனைக்கு மார்ச் 27 ஆம் தேதி வரவுள்ள மாடல் விலை ரூ. 3.50 லட்சத்துக்கு குறைவாக துவங்லாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.