இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில், சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் `வீர தீர சூரன் – பாகம் 2′ திரைப்படம் மார்ச் 27-ம் தேதி வெளியாகவிருக்கிறது. இப்படத்தில், எஸ்.ஜே. சூர்யா, மலையாள நடிகர் சுராஜ், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் இப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.

இந்த நிலையில், வீர தீர சூரன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், அருண்குமார், விக்ரம், எஸ்.ஜே. சூர்யா, துஷாரா விஜயன், ஜி.வி. பிரகாஷ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேடையில் பேசிய சுராஜ், “எனக்கு தமிழும் தமிழ் சினிமாவும் ரொம்ப பிடிக்கும். தமிழ்ல இன்னும் நிறைய படம் பண்ணனும்னு ஆசை வந்ததுக்கு காரணம் ‘வீர தீர சூரன்’ அனுபவம்தான். இயக்குநர் அருண்குமார் உண்மையான, தங்கமான மனிதர்.
விக்ரம் சார் எவ்வளவு பெரிய நடிகர் என்று எல்லாருக்கும் தெரியும். நான் அவரை முதன்முதலில் நேர்ல பார்க்கும்போது பிதாமகன், சேது, அந்நியன், பொன்னியன் செல்வன் கதாபாத்திரங்கள் எனக்கு ஞாபகம் வந்தது.

எனக்கு முதல் குழந்தை பிறந்தபோது எனக்கு முதல் மாநில விருது கிடைத்தது. இரண்டாவது குழந்தை பிறக்கும் போது எனக்கு இரண்டாவது மாநில விருது கிடைத்தது. மூணாவதா ஒரு பெண் குழந்தை பிறந்தது. இப்போ எனக்கு மாநில விருதும் தேசிய விருதும் கிடைத்தது. எனக்கு ஆஸ்கர் அவார்டு கிடைக்கும்னா நாலாவது குழந்தைக்கு ரெடி. அதுக்கு நீங்கதான் எனக்கு பிரார்த்தனை செய்யணும். என் மனைவி கிட்ட இந்த விஷயத்தை நான் சொல்றேன்” என்று சிரித்துக் கொண்டே பேசினார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
