இந்தியாவில் அரசுத் துறை, பொதுத்துறை, தனியார் வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் என பல்வேறு வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை பின்பற்றி செயல்பட்டு வருகிறது. அதேவேளையில், வங்கிகளுக்கு வங்கி வட்டி மற்றும் குறைந்தபட்ச வைப்புத் தொகை உள்ளிட்டவைகளில் ஒரே தரநிலை பின்பற்றப்படாமல் பல்வேறு மாறுபாடுகள் உள்ளன. தவிர, நகைக் கடன்களுக்கான வட்டியும் வங்கிக்கு வங்கி வேறுபடுவது போன்ற காரணங்களால் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளில் கணக்கு துவங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. […]
