ஐபிஎல் 2025 என்னும் கிரிக்கெட் திருவிழா இன்று முதல் தொடங்குகிறது. ஈடன் கார்டன் மைதானத்தில் தொடக்க விழாவைத் தொடர்ந்து நடைபெற உள்ள முதல் போட்டியில் கேகேஆர் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதுகின்றன. இப்போட்டியை ஜியோ சினிமா, ஜியோ ஹாட்ஸ்டார், ஸ்டார்ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரலையில் பார்க்கலாம். ஐபிஎல் போட்டிகளை ஜியோஹோட்ஸ்டாரில் பார்க்கலாம். இந்நிலையில், போட்டிகளை கண்டு களிக்க ஏதுவாக, ஜியோஹாட்ஸ்டாரின் இலவச சந்தா வழங்கும் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவின் மலிவான திட்டங்களை அறிந்து கொள்ளலாம்.
ஜியோவின் ஜியோஹாட்ஸ்டார் இலவச சந்தா திட்டம்
ஜியோ பயனர்கள் 100 ரூபாய் கட்டணத்தில் JioHotstar சந்தாவைப் பெறலாம். இந்த ரீசார்ஜ் திட்டத்தில் டேட்டாவையும் பெறுவீர்கள். ஜியோவின் இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் 5 ஜிபி டேட்டாவைப் பெறுவார்கள். 90 நாட்கள் செல்லுபடியாகும் திட்டம், ஐபில் 2025 போட்டிகளை கணடு ரசிப்பதற்கு உங்களுக்கான மிக மலிவான திட்டமாக இருக்கும். அதாவது வெறும் 100 ரூபாய்க்கு 90 நாட்களுக்கு JioHotstarல் போட்டிகளைப் பார்க்கலாம். இருப்பினும், இந்த திட்டத்தில் குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் சேவை கிடைக்காது. நீங்கள் 5 ஜிபி மட்டுமே பலனைப் பெற முடியும்.
வோடபோன் ஐடியாவின் ஜியோஹாட்ஸ்டார் இலவச சந்தா திட்டம்
வோடபோன் ஐடியா Vi வழங்கும் மலிவான திட்டம் ரூ 101 ரீசார்ஜ் திட்டமாகும், இதில் பயனர்கள் Jiohotstar இலவச சந்தாவைப் பெறுவார்கள். இந்த திட்டத்தில், பயனர்கள் 3 மாதங்களுக்கு இலவச ஜியோ ஹாட்ஸ்டாரை கணடு களிக்கலாம். இது தவிர, நிறுவனம் பயனர்களுக்கு 5 ஜிபி டேட்டாவையும் வழங்குகிறது. இருப்பினும், இந்த திட்டத்தில் பயனர்கள் குரல் அழைப்பு சேவையைப் பெற முடியாது.
ஏர்டெல்லின் ஜியோஹாட்ஸ்டார் இலவச சந்தா திட்டம்
ஏர்டெல் ரூ.100 திட்டம்
ஏர்டெல் 2 மலிவான ஜியோஹாட்ஸ்டார் திட்டங்களைக் கொண்டுள்ளது. ஒரு திட்டத்தின் விலை ரூ 100 மற்றும் மற்றொரு திட்டத்தின் விலை ரூ 195 ஆகும். ஏர்டெல்லின் ரூ.100 திட்டத்தைப் பற்றி பேசுகையில், பயனர் ஜியோஹாட்ஸ்டார் திட்டத்தை 30 நாட்கள் வேலிடிட்டியுடன் பெறுவார். மேலும், இந்த திட்டத்தில், பயனர் 5 ஜிபி டேட்டா, இதில், 30 நாட்களுக்கு இலவச JioHotstar மொபைல் சந்தாவைப் பெறுகிறார்.
ஏர்டெல் ரூ.195 திட்டம்
ரூ.195 திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 90 நாட்கள். இந்த திட்டத்தில் பயனர் மொத்தம் 15 ஜிபி டேட்டாவைப் பெறுவார். மேலும், இந்த திட்டத்துடன் நிறுவனம் 90 நாட்களுக்கு இலவச ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை வழங்குகிறது. இரண்டு திட்டங்களுடனும் குரல் அழைப்பு சேவை கிடைக்காது.