பாசெல்,
சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நடைபெற்று வருகிறது. வரும் 23-ம் தேதி வரை இத்தொடர் நடக்கிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளார்கள்.
இந்த தொடரில் மகளிர் இரட்டையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் திரிஷா ஜோலி- காயத்ரி கோபி சந்த் இணை, ஹாங் காங்கின் யூங் புய் லாம் – யூங் ந்கா டிங் இணையுடன் மோதியது.
இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய திரிஷா- காயத்ரி ஜோடி 21-18, 21-14 என்ற நேர் செட் கணக்கில் யூங் புய் லாம் – யூங் ந்கா டிங் இணையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
Related Tags :