சென்னை,
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் வருகிற நாளை தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன.கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. 23-ந் தேதி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் சந்திக்கின்றன.
இந்த போட்டிக்காக இரண்டு அணிகளும் தயாராகி வருகின்றன. இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களும், மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களும் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டனர்.
தீவிர வலைப்பயிற்சிக்குப் பின், மும்பை முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா அங்கு கூடியிருந்த ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் போட்டு கொடுத்தார் . மேலும் அவர்களுடன் செல்பியும் எடுத்துக் கொண்டார்.