IPL 2025, CSK vs MI: ஐபிஎல் தொடரின் மூன்றாவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை (மார்ச் 23) பலப்பரிட்சை நடத்த உள்ளது.
CSK vs MI: ஒரு போட்டிக்கு மட்டும் சூர்யகுமார் கேப்டன்
மும்பை இந்தியன்ஸ் அணி கடந்தாண்டு கடைசி லீக் போட்டியில் தாமதமாக பந்துவீசிய காரணத்தால் அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா நாளைய போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதில் கேப்டன்ஸியை சூர்யாகுமார் யாதவ் நாளைய ஒரு போட்டியில் மட்டும் கவனித்துக்கொள்கிறார்.
CSK vs MI: எங்கள் பந்துவீச்சாளர்களும் தயார்
இந்நிலையில், இன்று சென்னையில் சூர்யகுமார் யாதவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,”சிஎஸ்கே அணியில் சென்னை ஆடுகளத்துக்கு ஏற்ற சுழற்பந்துவீச்சாளர்கள் இருக்கின்றனர். சென்னையில் பந்துவீச எங்கள் அணியினரும் தயாராக இருக்கிறோம். சென்னையில் விளையாட ஆவலாக இருக்கிறேன்.
CSK vs MI: ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் யார்?
மேலும் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்தையும் செய்ய கூடிய ஹர்திக் போன்ற வீரர்கள் இடத்தில் மாற்று வீரரை கொண்டுவருவது சற்று கடினமான செயல் தான்… இருந்தாலும் ஆட்டத்தை தொடர வேண்டும்.
CSK vs MI: முதல் போட்டியில் வெற்றி பெறுவோம்…
கடந்த 11 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணி முதல் போட்டியில்
வெற்றி பெறாமல் இருக்கும் நிலையில், நாளை அந்த நிலை மாறும். நாளைய ஆட்டத்தை வெற்றியுடன் தொடங்குவோம். இளம் வீரர்கள் பலரும் அணிக்கு உள்ளே வந்திருக்கின்றனர். அவர்கள் உடன் நிறைய நேரம் செலவிட வேண்டும்” என்றார்.
CSK vs MI: விழுந்து விழுந்து சிரித்த சூர்யகுமார் யாதவ்
Uncapped வீரராக வந்துள்ள தோனியை எதிர்கொள்ள என்ன யுக்திகள் வைத்திருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு இத்தனை வருடங்களாக அவரை யாராலும் சாமாளிக்க முடிந்ததா… சென்னைக்கு வரும்போதெல்லாம், சென்னை அணி ஆடும் போது அவர் டிரெஸ்ஸிங் ரூமில் இருந்து வெளியே வருவதை பார்ப்பதற்கு அருமையாக இருக்கும்.
அவரிடம் இருந்து நிறைய நல்ல விஷயங்களை கற்றுக்கொண்டு இருக்கிறோம், எங்களுக்கு எதிராக நாளை விளையாட இருக்கிறார். ஆர்வமுடன் இருக்கிறேன், மிகுந்த சவாலாக இருக்கும்” என்றார். ஆனால், இந்த கேள்வி வந்த உடன் சூர்யகுமார் யாதவ் விழுந்து விழுந்து சிரித்தார். பதில் சொல்லி முடித்த உடனும் அவர் சிரித்துக்கொண்டே எழுந்து சென்றார்.
CSK vs MI: மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளேயிங் லெவன் கணிப்பு
ரியான் ரிக்கல்டன் (விக்கெட் கீப்பர்), ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, நமன் திர், ராபின் மின்ஸ் (விக்கெட் கீப்பர்), மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், டிரென்ட் போல்ட், ரீஸ் டாப்லி, கர்ன் ஷர்மா இம்பாக்ட் வீரர்: ராஜ் அங்கத் பவா/ சத்யநாராயண ராஜூ.