புதுடெல்லி,
மக்களவையில் நேற்று ஜல்சக்தி துறைக்கான மானியக்கோரிக்கை மீதான விவாதங்கள் நடந்தது. அப்போது நதி நீர் இணைப்பு உள்ளிட்ட உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு ஜல்சக்தி மந்திரி பாட்டீல் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-நதிநீர் இணைப்புக்காக 30 ஆறுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன, மேலும் 11 நதிகளுக்கான விரிவான திட்ட அறிக்கைகளும் தயாரிக்கப்பட்டுள்ளன. நீர்வளம் மாநிலப்பட்டியல் சார்ந்தது என்பதால், இந்த விவகாரத்தில் மாநிலங்களுக்கு இடையே ஒருமித்த கருத்து உருவாக வேண்டும். அது ஏற்படாமல் மத்திய அரசால் முன்னோக்கி செல்ல முடியாது. நதிநீர் இணைப்பு தொடர்பாக ஆற்றுப்படுகை மாநிலங்களுக்கு இடையே ஒருமித்த கருத்து இல்லாததால், அதை ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இவ்வாறு ஜல்சக்தி மந்திரி பாட்டீல் கூறினார்.