டெல்லி: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டிட பணிகள் 26 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதே வேகத்தில் நடை பெற்றால், 2027ல் முழுமையாக பயன்பாட்டு வரும் என நம்பப்படுகிறது. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அமைச்சர் பிரதாப் ராவ் பதில் அளித்தார். அவர் அளித்த பதிலில், மதுரையில் ரூ.2021.51 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அமைக்க ஒப்புதல் […]
