IPL 2025 KKR vs RCB live Streaming : ஐபிஎல் கேகேஆர் – ஆர்சிபி போட்டியை நேரலையில் எப்போது? எங்கு பார்ப்பது?

IPL 2025 KKR vs RCB live : கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ஐபிஎல் 2025 தொடர் கோலாகலமாக இன்று கொல்கத்தாவில் தொடங்குகிறது. ஈடன் கார்டன் மைதானத்தில் தொடக்க விழாவைத் தொடர்ந்து முதல் போட்டி நடக்க இருக்கிறது. இன்று நடக்கும் ஐபிஎல் தொடக்க விழாவில் திஷா பட்டானி மற்றும் ஸ்ரேயா கோஷல் ஆகியோர் கலந்து கொண்டு கலைநிகழ்ச்சிகளை அரங்கேற்றுகின்றனர். இதனைத் தொடர்ந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இப்போட்டியை ஜியோ சினிமா, ஜியோ ஹாட்ஸ்டார், ஸ்டார்ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரலையில் பார்க்கலாம். எப்போது, எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். 

ஐபிஎல் தொடக்க போட்டி

ஐபிஎல் 2025 தொடரின் தொடக்க போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது. கொல்கத்தா அணி அஜிங்கியா ரஹானே தலைமையில் களம்காண உள்ளது. ஆர்சிபி அணி ரஜத் படிதார் தலைமையில் இந்த ஐபிஎல் தொடரில் விளையாடுகிறது. புதிய கேப்டன்கள் தலைமையில் இரு அணிகளுக்கும் இந்த தொடரில் முதல் போட்டியை சந்திக்க உள்ளன. அஜிங்கியா ரஹானே அனுபவம் வாய்ந்தவர். ரஜத் படிதார் இளம் வீரர். இருவரது தலைமையில் கேகேஆர் மற்றும் ஆர்சிபி அணிகளின் ஆட்டம் எப்படி இருக்கப்போகிறது என்பதை காண ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர். இப்போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

ஐபிஎல் கேகேஆர் – ஆர்சிபி போட்டியை எங்கே பார்க்கலாம்?

1. டிவி : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 HD, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் போன்ற சேனல்களில் லைவ் பார்க்கலாம்.

2. லைவ் ஸ்ட்ரீமிங்: ஜியோசினிமா (JioCinema) பயனர்கள் ஜியோசினிமா ஆப் மூலம் இலவசமாக லைவ் பார்க்கலாம். டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) செயலி மற்றும் வெப்ஸைட் மூலம் லைவ் ஸ்ட்ரீமிங் கிடைக்கும். பிரீமியம் சப்ஸ்கிரிப்ஷன் எடுத்தால் அனைத்து போட்டிகளையும் பார்க்கலாம்.

3. ஸ்மார்ட் டிவி மற்றும் ஸ்ட்ரீமிங் டிவைஸ்கள்: ஸ்மார்ட் டிவி, அமேசான் ஃபயர் ஸ்டிக், கூகுள் க்ரோம்காஸ்ட் போன்ற டிவைஸ்கள் மூலம் ஜியோ சினிமா அல்லது ஹாட்ஸ்டாரை இணைத்து IPL போட்டிகளை பார்க்கலாம்.

4. மொபைல் டேட்டா பிளான்கள்: ஜியோ, ஏர்டெல், வோடாஃபோன் போன்ற நெட்வொர்க்குகள் IPL போட்டிகளை இலவசமாக பார்க்க சிறப்பு டேட்டா பிளான்களை வழங்கலாம். இதை பயன்படுத்தி லைவ் போட்டிகளை பார்க்கலாம்.

சட்டவிரோத ஸ்ட்ரீமிங் தளங்களை தவிர்க்கவும்: சட்டவிரோத ஸ்ட்ரீமிங் தளங்கள் மூலம் IPL போட்டிகளை பார்ப்பது சட்டவிரோதமானது மற்றும் பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்தும். இதனால், உங்கள் ஸ்மார்ட்போன், டிவி மற்றும் கம்ப்யூட்டர், லேப்டாப்களில் வைரஸ் அல்லது மால்வேர் பிரச்சினைகள் ஏற்படலாம்.

மேலும் படிங்க: ஏலம் போகாத வில்லியம்சன்… ஆனாலும் ஐபிஎல் தொடரில் களமிறங்குகிறார்… அது எப்படி?

மேலும் படிங்க: கே.எல்.ராகுல் இல்லை.. அப்போ டெல்லி அணியின் தொடக்க வீரர்கள் யார்? இம்பேக்ட், பிளேயிங் XI என்ன?

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.