கடந்த வாரம், டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. அவர் அந்த நேரத்தில் வீட்டில் இல்லை. இதனால், தீயணைப்பு துறையின் உதவியை நாடியுள்ளது அவரது குடும்பம்.
தீயணைப்பு முடித்ததும், தீயணைப்பு வீரர்கள் அவரது வீட்டில் கட்டு கட்டான பணத்தை கண்டுள்ளனர். இதனையடுத்து, போலீசாருக்கு தகவல் தெரிவிகப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பேச கூடிய இந்திய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான கூட்டத்தில், ‘யஷ்வந்த் வர்மா முன்பு வேலை பார்த்த அலகாபாத் நீதிமன்றத்திற்கே, அவரை மீண்டும் பணி மாறுதல் செய்வதற்கும், அவர் மீது விசாரணை நடத்திடவும்’ முடிவு செய்யப்பட்டது.

விளக்கக் கடிதம்
சம்பவம் குறித்து டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாய்யிடன் நீதிபதி யஷ்வந்த் வர்மா கொடுத்த விளக்கக் கடிதத்தில், “பணம் கண்டுபிடிக்கப்பட்ட குறிப்பிட்ட அறை அனைவராலும் பயன்படுத்தப்படும் ஒரு அறை ஆகும். பயன்படுத்தாத நாற்காலிகள், பாட்டில்கள், பாத்திரங்கள், தோட்டக் கருவிகள் ஆகியவற்றை போட்டு வைக்கும் அறை ஆகும்.
அது ஒரு பூட்டப்படாத அறை. அந்த அறைக்கு முன்பக்க கதவு மூலமும், பணியாளர்கள் குடியிருப்பிற்கு பின் இருந்தும் வந்துப்போக முடியும். அதனால், இது என்னுடைய வீட்டின் அறை என்று கூறப்பட்டது போல இல்லை.
ஊரில் இல்லை!
இந்த சம்பவம் நடந்தப்போது நானும், என் மனைவியும் மத்திய பிரதேச சென்றிருந்தோம். என்னுடைய மகள் மற்றும் வயதான அம்மா மட்டுமே வீட்டில் இருந்தனர். மார்ச் 15-ம் தேதி தான், என் மனைவியுடன் டெல்லிக்கு திரும்பினேன்.
தீ விபத்து நடு இரவில் நடந்தபோது, என்னுடைய மகள் மற்றும் என்னுடைய தனி செயலாளர் இருவரும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தீயை அணைக்க, என் குடும்ப உறுப்பினர்களை வெளியில் இருக்க கூறியுள்ளனர் தீயணைப்பு வீரர்கள். தீயணைப்பு முடிந்து, அவர்கள் வீட்டிற்குள் வந்தப்போது, அப்படி எந்தவொரு பணத்தையும் என் குடும்பத்தினர் பார்க்கவில்லை.

நம்ப முடியாத ஒன்று
நானோ, என் குடும்ப உறுப்பினர்களோ யாரும் அந்த அறையில் இதுவரை எந்த பணத்தையும் வைத்ததில்லை. அதனால், அந்தப் பணம் என்னுடையது என்று கூறுவதை முற்றிலும் மறுக்கிறேன். பூட்டப்படாத, அனைவரும் வந்துப்போகும், திறந்த ஒரு அறையில் பணத்தை வைப்பது என்பது நம்ப முடியாத ஒன்று.அந்த அறைக்கும் எனது வீட்டிற்கும் சம்பந்தமே இல்லை.
விசாரணை வேண்டும்
என்னுடைய பெயரைக் கெடுக்கவே இப்படி ஒரு சம்பவம் நடத்தப்பட்டு உள்ளது. இந்த மாதிரியான எந்தப் புகாரும், சந்தேகமும் என் மீது முன்னர் வந்ததில்லை. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளார்.
இவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்ட வீடியோவை தற்போது இந்திய தலைமை நீதிபதி மற்றும் டெல்லி கமிஷனர் வெளியிட்டுள்ளனர்.
Here’s the video shared by the Delhi Police Commissioner with the Chief Justice of Delhi High Court in Yashwant Varma’s matter pic.twitter.com/LJGh3LNPjG
— Ashish Goel (@ashish_nujs) March 22, 2025
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
