கொல்கத்தா,
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இன்று தொடங்கியது. இன்று நடைபெற்று வரும் தொடக்க லீக் ஆட்டத்தில் கொல்கத்தா – பெங்களூரு அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டம் தொடங்குவதற்கு முன்னர் தொடக்க விழா நடைபெற்றது. இதில் ஷ்ரேயா கோஷல் பாடல்கள் பாடி அசத்தினார். இஷா பதானி கவர்ச்சி நடனம் ஆடினார். அதன்பின் ஷாருக்கான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ஆர்.சி.பி அணிக்காக 18 வருடங்கள் தொடர்ந்து விளையாடி வரும் விராட் கோலியை புகழந்து பேசினார். அப்போது கிங் ஆப் கிரிக்கெட், கோட் என விராட் கோலியை பாராட்டு வரவேற்றார். அதற்கு விராட் கோலி நன்றி தெரிவித்தார். பின்னர் விராட் கோலி மற்றும் ரிங்கு சிங் உடன் ஷாரூக் கான் சற்று நேரம் உரையாடினார். விராட் கோலியை கோல்டன் தலைமுறை எனவும், ரிங்கு சிங்கை இளம் தலைமுறை எனவும் ஷாருக்கு கூறினார்.
பின்னர் இருவருடனும் ஷாருக் கான் நடனம் ஆடினார். ஷாருக்கான் உடன் விராட் கோலியும், ரிங்கு சிங்கும் சேர்ந்து ஆடினர். பி.சி.சி.ஐ தலைவர் ரோஜர் பின்னி, விராட் கோலிக்கு 18 வருடமாக ஆர்.சி.பி அணிக்காக விளையாடுவதை கவுரவப்படுத்தும் வகையில் நினைவுப் பரிசு வழங்கினார். நிகழ்ச்சி முடிவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.