நெல்லை நேற்று நெல்லை மற்றும் தூத்துக்குடியில் கனமழை பெய்துள்ளதால் கோடையில் வாடிய மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். . நேற்றுகாலை முதல் நெல்லை மாவட்டம் அம்பை, மணிமுத்தாறு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், திடீரென பரவலாக மழை பெய்தது. மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தச்சநல்லூர், கொக்கிரகுளம், வண்ணாரப்பேட்டை, பாளையங்கோட்டை மற்றும் கே.டி.சி. நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் […]
