இம்பால்,
மணிப்பூரில் சுமார் 2 ஆண்டுகளாக வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்த கலவரம் தொடர்பாக அண்டை நாடான மியான்மரில் இருந்து சட்ட விரோதமாக குடியேறியவர்கள் மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றன.
எனவே சட்ட விரோத குடியேறிகளை மாநில அரசு கைது செய்து தடுப்புக்காவல் மையங்களில் சிறை வைத்துள்ளது. இவ்வாறு சிறைவைக்கப்பட்ட 27 பேரின் தண்டனை காலம் நிறைவடைந்துள்ளது. எனவே அவர்கள் 27 பேரும் நேற்று மியான்மருக்கு நாடு கடத்தப்பட்டனர். இந்தோ-மியான்மர் நட்புறவு வாயில் வழியாக அவர்களை இந்திய அதிகாரிகள் மியான்மர் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
Related Tags :