ஒவ்வொரு வருடமும் உலக வானிலை நாள், மார்ச் 23-ம் நாள் கொண்டாடப்படுகிறது. 2025 இல் ‘CLOSING EARLY WARNING GET TOGETHER’ என்கிற கருத்தாக்கத்தை உலக வானிலை நாள் மையமாகக் கொண்டுள்ளது. உலக வானிலையின் தந்தை என லுக் ஹோவார்ட் (LUKE HOWARD) அழைக்கப்படுகிறார்; இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இவர் 1801-1841 காலகட்டத்தில் லண்டன் மாநகரின் வானிலை பற்றிய எழுதிய கட்டுரைகள் வானிலை ஆய்வுக்கு வித்திட்டது. ஒரு நாட்டின் பொருளாதாரம், தொழில், விவசாயம், கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, தொழில், விஞ்ஞான போன்ற பல துறைகளில் வானிலை முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்தியாவின் வானிலை தந்தை என டாக்டர் மேகநாத் சாஹா என அழைக்கப்படுகிறார். இவர் வளிமண்டல ஆய்வுகளின் காலநிலை மாற்றங்கள் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டவர்.
உலக வானிலையியல் அமைப்பின் தலைமையகம் ஜெனிவாவில் இயங்கி வருகிறது. இந்திய வானிலைத் துறையின் தலைமை அலுவலகம் டெல்லியில் உள்ளது; சென்னை, மும்பை, கல்கத்தா, நாக்பூர், குவஹாத்தி , டெல்லி போன்றவற்றில் பிராந்திய சேவை அமைப்புகள் இயங்கி வருகின்றன.
காலநிலை மாற்றம்: நிலம், நீர், காற்று மூன்றிலும் வானிலையின் தாக்கம் உள்ளது. ‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. அந்தவகையில் காலநிலை, பருவநிலை மாற்றங்கள் பெரும் தாக்கத்தை வானிலையில் உருவாக்கி வருகிறது. உலகின் பல பகுதிகளில் காலநிலை மாற்றத்தால் தீவிர அபாயங்கள் ஏற்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள், வானிலையாளர்கள், வானிலை குறிப்புகளை பெற்று முன்னேச்சரிக்கைகள் வழங்குகிறார்கள்.
இந்தியாவைப் பொறுத்தவரை குளிர்காலம், குளிர் அலைகள், வெப்ப காலம், வெப்ப அலைகள் காலம், தென்மேற்கு பருவமழை காலம், வடகிழக்கு பருவமழை காலம், இயற்கை பேரிடர்களான தீவர புயல், கனமழை, வெள்ளம், வறட்சி பூகம்பம் போன்ற செய்திகளை வானிலை நிலையங்கள் வழங்குகின்றன. குறிப்பாக மீனவர்கள், கடலோரப்பகுதிகள் வசிப்பவர்கள், விவசாயிகளுக்கு வானிலை நிகழ்வுகள் குறித்த முன்னெச்சரிக்கைகள் வழங்கப்படுகின்றன. இதன் அடிப்படையில் சிவப்பு அலெர்ட் , ஆரஞ்சு அலெர்ட், மஞ்சள் அலெர்ட், பச்சை அலெர்ட் என எச்சரிக்கைகளை வானிலை அமைப்புகள் விடுக்கின்றன.
காலநிலை பாதிப்புகள்: காலநிலை மாற்றங்களால் அதிக பாதிப்புக்குள்ளாகும் நாடுகளில் இந்தியா 7-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் 140 கோடி மக்களில் 80 %க்கும் அதிகமானோர் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரழிவுகளால் பாதிக்கக்கூடிய பகுதிகளில் வாழ்கிறார்கள். இந்தியாவில் அசாம், பிஹார், ஒடிசா, மிசோரம், ஜார்க்கண்ட், மஹாராஷ்டிரம், ஆந்திரப் பிரதேசம் ஆகியவை அதிக பாதிப்புகளை எதிர்க்கொள்ளக்கூடிய மாநிலங்களாக அறியப்படுகின்றன.
கடந்த ஆண்டில்… – 2024 ஆம் ஆண்டு வரலாற்றிலேயே மிகவும் வெப்பமான ஆண்டு என ஐரோப்பாவின் காலநிலை அமைப்பு தெரிவித்துள்ளது. 2024 இல் காலநிலை சார்ந்த 124 பேரிடர்கள் ஏற்பட்டன. 2 வறட்சி நிகழ்வுகள், 10 வெப்ப அலைகள், 17 நிலச்சரிவுகள், 58 வெப்பமண்டல புயல்கள், 37 காட்டுத்தீ நிகழ்வுகள், 310 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி இழப்பும் ஏற்பட்டது.
இந்தியாவில் 2024 இல், 9 மாதங்களில் தீவிர வானிலை நிகழ்வு ஏற்பட்டிருக்கிறது; இதில் 32,38 பேர் உயிரிழந்திருக்கின்றனர். நாட்டின் 32 இடங்களில் விளைநிலம் பாதிக்கப்பட்டுள்ளது. 9,457 கால்நடைகள் உயிரிழந்திருக்கின்றன. தீவிர வானிலை நிகழ்வுகளால் மிக அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலமாக மத்திய பிரதேசம், உயிரிழப்பில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக கேரளம் உள்ளது. வெள்ளத்தால் மட்டும் இந்தியாவில் 2024 இல் 1376 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
2047 ஆண்டுக்குள் குக்கிராமங்கள் வரை வானிலை நிகழ்வு கணிப்புகள் சிறப்பாக செயல்படும் வேண்டும் என்கிற இலக்குடன் இந்திய வானிலை அமைப்பு செயல்பட்டு வருகிறது. துல்லியான முன்னெச்சரிக்கை அறிவிப்பின் மூலம் உயிரிழப்புகளைத் தவிர்த்து முன்னேற்ற பாதையில் பயணிப்போம்.
ஈ.ரா.சுகுமார் – கட்டுரையாளர், வானிலையாளர் (ஓய்வு)
மார்ச் 23: உலக வானிலை நாள்