̀எல் 2: எம்புரான்’ படத்திற்கான புரொமோஷன் பணிகளுக்காக இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்குப் பயணித்து வருகிறார் நடிகர் ப்ரித்விராஜ். அந்த நிகழ்வுகளில் பல்வேறு சுவரஸ்யான தகவல்களையும் பகிர்ந்து வருகிறார். அந்த வரிசையில் அவர் தயாரித்திருந்த பாலிவுட் திரைப்படமான ̀செல்ஃபி’ திரைப்படத்திற்கு நடிகர் அக்ஷய் குமார் சம்பளம் பெறவில்லை என்ற பலரும் அறிந்திடாத தகவலை சொல்லியிருக்கிறார்.

2022-ம் ஆண்டு அக்ஷய் குமாருக்கு கடினமான காலம் என்றே சொல்லலாம். அவர் நடித்திருந்த படங்களெல்லாம் அப்போது பெரியளவில் பாக்ஸ் ஆபீஸில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
அதனை தொடர்ந்து 2023-ம் ஆண்டு வெளியான ̀செல்ஃபி’ திரைப்படமும் பெரிதளவில் வரவேற்பைப் பெறவில்லை. அக்ஷய் குமார் குறித்து பிங்க்வில்லாவுக்கு அளித்த பேட்டியில் ப்ரித்விராஜ், “ அக்ஷய் குமார் சார் நடித்திருந்த ̀செல்ஃபி’ திரைப்படத்தை நான் தயாரித்திருந்தேன்.

அப்படத்திற்காக ஒரு ரூபாயைக் கூட அவர் சம்பளமாகப் பெறவில்லை. இத்திரைப்படம் பணம் ஈட்டினால் நான் என் சம்பளத்தை எடுத்துக்கொள்கிறேன் எனக் கூறினார். படம் சரியாகப் போகவில்லை. அதனால் அவர் சம்பளமும் பெறவில்லை.” எனக் கூறியிருக்கிறார்
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX