BSNL Cheap Recharge Plans: பொதுத்துறை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் நிறைவான சேவையை நீண்ட காலமாக வழங்கி வருகிறது எனலாம். தற்போது 4ஜி சேவையை நாடு முழுவதும் வழங்கி வருகிறது. விரைவில் 5ஜி சேவையை வழங்க இருக்கிறது.
BSNL Cheap Recharge Plans: வாடிக்கையாளர்கள் விரும்பும் பிஎஸ்என்எல்
மற்ற தனியார் நிறுவனங்களான ஏர்டெல், வோடபோன் ஐடியா, ஜியோ போன்ற நிறுவனங்களின் ரீசார்ஜ் திட்டங்களை விட பிஎஸ்என்எல் வழங்கும் திட்டங்கள் அதிக பலன்களை குறைந்த விலையில் வழங்குகின்றன எனலாம். கடந்தாண்டு இந்த மூன்று தனியார் நிறுவனங்களும் ரீசார்ஜ் திட்டங்களுக்கான விலையை அதிகப்படுத்திய உடன் பல வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் நம்பரை அப்படியே பிஎஸ்என்எல் நெட்வோர்க்கிற்கு மாற்றினர்.
BSNL Cheap Recharge Plans: 84 நாள்கள் வேலிடிட்டி
ஒருவேளை நீங்களும் தற்போது அதேபோல் பிஎஸ்என்எல் சிம்மை பெற வேண்டும் என்றால் உங்களுக்கு என சிறப்பான திட்டம் ஒன்றும் உள்ளது. 84 நாள்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்தை மிகவும் மலிவான விலையில் நீங்கள் பெறலாம். அந்த ரீசார்ஜ் திட்டம் குறித்த முழு விவரங்களையும் இங்கு காணலாம்.
BSNL Cheap Recharge Plans: பிஎஸ்என்எல் ரூ.599 திட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு விலை வகைமைகளில் பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகின்றன. அதில், 599 ரூபாய்க்கான ரீசார்ஜ் திட்டம் பல்வேறு சிறப்பான வசதிகளை வழங்குகிறது. அதாவது, மற்ற நிறுவனங்கள் இந்த விலையில் வழங்கும் வசதிகளை விட பிஎஸ்என்எல் அதிக வசதிகளை வழங்குகிறது. இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்புகள் மட்டுமின்றி டேட்டா பலன்களும் கிடைக்கிறது.
BSNL Cheap Recharge Plans: வரம்பற்ற காலிங் வசதி
599 ரூபாயில் கிடைக்கும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாள்கள் ஆகும். நாடு முழுவதும் வாடிக்கையாளர்கள் எந்த நெட்வோர்க்கிற்கு வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் பேசிக்கொள்ளலாம். 84 நாள்களும் வரம்பற்ற அழைப்புகள் வசதி கிடைக்கிறது. மேலும், தினமும் 100 எஸ்எம்எஸ் இலவசமாக கிடைக்கும்.
BSNL Cheap Recharge Plans: டேட்டா பலன்கள்
மேலும், இத்திட்டத்தில் தினமும் 3ஜிபி டேட்டா கிடைக்கும். டேட்டா முடிந்துவிட்டால் இணைய வேகம் 40kbps ஆக குறைந்துவிடும். இந்த திட்டத்தை பெற பிஎஸ்என்எல் செயலி மூலமும் ரீசார்ஜ் செய்யலாம். கூகுள் பே, போன் பே போன்ற ஆன்லைன் செயலியிலும் ரீசார்ஜ் செய்துகொள்ளலாம்.