IPL 2025 CSK vs MI : இன்று சென்னை அணியே வெற்றி பெறும்… ஏன்? மும்பை அணி ராசி அப்படி..!

CSK vs MI IPL 2025: ஐபிஎல் 2025 தொடர் கோலாகலமாக கொல்கத்தாவில் நேற்றிரவு தொடங்கியது. கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கிய இந்த தொடரின் முதல் போட்டியில் ஆர்சிபி அணி நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பந்தாடி, பிரம்மாண்ட வெற்றியை பெற்று அசத்தியது. இந்நிலையில், இன்று சென்னை சேப்பாக்கத்தில் சிஎஸ்கே விளையாடுகிறது. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. ஐபிஎல் வரலாற்றில் இரு பெரும் அணிகள் மோதும் இப்போட்டியை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். ஏனென்றால் 17 சீசன் நடந்து முடிந்திருக்கும் ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் தலா 5 முறை சாம்பியன் பட்டத்தை வெற்றி பெற்று அசத்தியுள்ளன.

அந்தளவுக்கு இரு அணிகளும் மிகப்பெரும் பலம் வாய்ந்த அணிகள். சிஎஸ்கே மற்றும் எம்ஐ எப்போது மோதினாலும் மூன்று மணி நேர திரில்லர் படத்துக்கு இணையான விறுவிறுப்புகள் இருக்கும். கடைசி பந்து வரை வெற்றி வாய்ப்பு எந்த அணி பெறும் என்ற எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருக்கும். இந்த அணியே வெற்றி பெறும் என நினைத்துக் கொண்டிருக்கும் சமயத்தில் திடீர் அதிரடிகள், கேட்சுகள், ரன்அவுட்டுகள் அந்த போட்டியின் முடிவையே மாற்றிவிடும். அதனால், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் போட்டியில் மட்டும் வெற்றி என உறுதியான பின்னரே சொல்ல முடியும். அந்தளவுக்கு கடுமையாக இருக்கும் இந்த போட்டியில் இன்றைய நாளில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் இருக்கிறது.

சூழல்களை வைத்து பார்க்கும்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருக்கிறது. சிஎஸ்கே அணிக்கு சாதகமான அம்சங்கள் என்னவென்றால் சொந்த மைதானம், பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என எல்லா துறையிலும் நச்சுனு செயல்படக்கூடிய அணி. கூடுதலாக எம்எஸ் தோனி இந்த அணியில் தான் இருக்கிறார். பீல்டிங்கின்போது பந்துவீச்சாளர்களை மாற்றுவது எதிரணிக்கு போட்டியை கடுமையானதான மாற்றக்கூடிய வகையில் முடிவுகளை எடுப்பதில் அவருக்கு நிகர் அவரே. இந்த காரணங்களே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்றைய போட்டியில் வெற்றி பெறும் என சொல்லிவிடலாம்.

இதனையும் தவிர்த்து பார்த்தால் சென்னை அணிக்கு ஒரு அதிர்ஷ்டமும் இருக்கிறது. அதுஎன்னவென்றால் மும்பை அணி ஐபிஎல் வரலாற்றில் 2012 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் போட்டியில் வெற்றி பெறவே இல்லை. இதுவே அந்த அணிக்கு ஒரு மிகப்பெரிய பலவீனமாக ஆண்டுதோறும் அமைந்து வருகிறது. இந்த அம்சத்தில் பார்க்கும்போது சிஎஸ்கே மும்பை இந்தியன்ஸ் அணியை மனதளவில் வீழ்த்துவதற்கான ஒரு காரணி புள்ளியாகவும் இருக்கிறது. மும்பை அணி இந்த முறையாவது முதல் போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்ற ஒரு நெருக்கடியுடன் விளையாடும். ஆனால் எந்த நெருக்கடியும் இல்லாமல் களமிறங்கும் சிஎஸ்கே, மும்பை அணிக்கு இருக்கும் இந்த நெருக்கடியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இன்றைய போட்டியில் வெற்றி பெற்றுவிட அதிக வாய்ப்பு இருக்கிறது. 

அதேநேரத்தில் இரு அணிகளும் இதுவரை மோதிய ஆட்டங்களில் மும்பை அணியே அதிக வெற்றிகளை பெற்றிருக்கிறது. இரு அணிகளும் 37 போட்டிகளில் விளையாடி இருக்கும் நிலையில் மும்பை அணி 20 போட்டிகளிலும் சிஎஸ்கே அணி 17 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.