Samsung Galaxy F16 5G Discount: ஸ்மார்ட்போனில் சாம்சங் உங்களுக்கு மிகவும் பிடித்த பிராண்டா அப்படியானால் இதோ வெளியாகியுள்ளது ஒரு நல்ல செய்தி. தற்போது, சாம்சங் ஸ்மார்ட்போனான Samsung Galaxy F16 5G இல் மிகப்பெரிய தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த ஸம்ராட்போனை நீங்கள் மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம். இந்த போனில் பல சிறந்த அம்சங்கள் உள்ளன. இதனால் தற்போது பட்ஜெட் விலை இந்த ஸ்மார்ட்போனை வாங்க இதுவே சரியே நேரம். இதில் மிக முக்கிய அம்சம் என்னவென்றால் குறைவான விலையில் உங்களுக்கு நல்ல 5G போன் தேர்வாகும் இதுவாக இருக்கலாம். இப்போது இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்படும் தள்ளுபடி மற்றும் பிற அம்சங்களைப் பற்றி விரிவாகக் தெரிந்துக்கொள்வோம்.
Samsung Galaxy F16 5G: தள்ளுபடி
8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜூடன் கூடிய Bling Black நிறத்தில் அமேசானில் Samsung Galaxy F16 5G போனை நீங்கள் ரூ.18,999 விலைக்கு வாங்கலாம். ஆனால், எவ்வித வங்கி தள்ளுபடியின்றி இந்த போன் 18% தள்ளுபடியுடன் வாங்கலாம். இதன் மூலம் Samsung Galaxy F16 5G போனை ரூ.15,499க்கு வாங்கலாம். அதாவது ஒரிஜினல் விலையை விட ரூ.3,500 குறைவான விலையில் இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம். இத்துடன் தள்ளுபடிகள் முடிவதில்லை. கூடுதலாக எக்ஸ்சேஞ்ச் சலுகையில் மேலும் போனின் விலை குறையும்.
வங்கி தள்ளுபடிகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழு விவரம்:
Samsung Galaxy F16 5G போனை பிளிப்கார்ட்டில் வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்கள் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு மூலம் கூடுதலாக 5% கேஷ்பேக் பெறலாம். மேலும் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1,000 தள்ளுபடி வழங்கப்படும். எஸ்பிஐ டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கும் தள்ளுபடி வழங்கப்படும்.
இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில் ரூ.9,500 மதிப்புள்ள எக்ஸ்சேஞ்ச் சலுகையும் வழங்கப்படுகிறது. எனினும் இந்த சலுகையானது தொலைபேசியின் மதிப்பு அதன் மாதிரி மற்றும் நிலையைப் பொறுத்தது. இதற்கு நீங்கள் போனின் விவரங்களை உள்ளிட்டு மதிப்பை சரிபார்த்துக் கொள்ளலாம்.
Samsung Galaxy F16 5G: விவரக்குறிப்புகள்
Samsung Galaxy F16 5G ஸ்மார்ட்போனின் அம்சங்களை பற்றி பேசுகையில், இந்த ஸ்மார்ட்போனில் 6.7-இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது 90Hz ரெஃப்ரஷ் ரேட் மற்றும் 800 nits பீக் பிரைட்னஸூடன் வருகிறது. இந்த போனில் 8GB வரையிலான ரேம் மற்றும் 128GB வரையிலான ஸ்டோரேஜ் ஆப்ஷனுடன் இணைக்கப்பட்ட மீடியாடெக் டைமன்சிட்டி 6300 SoC ப்ராசஸர் கொடுக்கப்பட்டு உள்ளது. கேமரா பற்றி பேசுகையில், இதில் மூன்று பின்புற கேமரா கொடுக்கப்பட்டுள்ளது, இதில் 50MP பிரதான கேமரா, 5MP இரண்டாம் நிலை கேமரா மற்றும் 2MP மேக்ரோ சென்சார் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புக்காக 13 எம்பி முன்பக்க கேமரா தரப்பட்டுள்ளது. மேலும் இதில் 5,000 mAh பேட்டரி, 25W வயர்டு சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது.