ஆட்டோ ரிக்ஷா டூ ஐபிஎல்! யார் இந்த விக்னேஷ் புதூர்? வெளியான சுவாரஸ்ய தகவல்!

ஞாயிற்றுக்கிழமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் சென்னை அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கடைசியாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விளையாடி 5 போட்டிகளிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய நூர் அகமது ஆட்டநாயகன் விருதை வென்றார். இருப்பினும் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் மும்பை அணியை சேர்ந்த இளம் சுழர்பந்து வீச்சாளர் விக்னேஷ் புதூர் தான்.

தனது முதல் போட்டியிலேயே ருதுராஜ் கெய்க்வாட், சிவம் துபே மற்றும் தீபக் ஹூடா ஆகியோரின் விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். ரோகித் சர்மாவிற்கு பதிலாக இம்பாக்ட் வீரராக வந்த இவர் போட்டியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். ஐபிஎல்லில் தனது முதல் ஓவரிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் விக்கெட்டை வீழ்த்தினார். அதன்பிறகு சிவம் துபே மற்றும் தீபக் ஹூடா ஆகியோரின் விக்கெட்களை அடுத்தடுத்து எடுத்து ஒரு திருப்பத்தை ஏற்படுத்தினார். 4 ஓவர்களில் 32 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார் விக்னேஷ் புதூர்.

யார் இந்த விக்னேஷ் புதூர்?

கேரளாவில் மலப்புறத்தைச் சேர்ந்த சுழற் பந்துவீச்சாளர் விக்னேஷ் புதூர் மும்பை இந்தியன்ஸ் அணியால் ஏலத்தில் ரூபாய் 30 லட்சத்திற்கு வாங்கப்பட்டார். இதுவரை அவர் சீனியர் லெவல் அணியில் கேரளாவிற்காக விளையாடவில்லை என்றாலும், அவரின் திறமையை நம்பி மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. U14 மற்றும் U 19 லெவலில் மட்டுமே விளையாடியுள்ள விக்னேஷ், தற்போது கேரளா கிரிக்கெட் லீக்கில் ஆலப்பி ரிப்பிள்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். மேலும் இவர் தமிழ்நாடு பிரிமியர் லீக்கிலும் விளையாடி உள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த ஒரு ஆட்டோ ஓட்டுநரின் மகன்தான் இந்த விக்னேஷ் புதூர். உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக வந்து வீசியதன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருந்தார். தனது கல்லூரிக்காக விளையாடிய போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்தி அசத்தியிருந்தார். இவரின் திறமையை கண்டு இவரை தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற SA20 போட்டிக்கு அனுப்பியது மும்பை இந்தியன்ஸ். அங்கு எம்ஐ கேப்டவுன் அணியில் நெட் பவுடராக இருந்து பயிற்சிகளை பெற்றார். தனது முதல் ஐபிஎல் போட்டியிலேயே அசத்திய விக்னேஷ் புதூர் இந்த ஐபிஎல் தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்படும் வீரராக மாறி உள்ளார்.

STORY OF VIGNESH PUTHUR:

– Hasn’t played for Kerala senior team.
– MI scouted from league cricket.
– Get him in the plane to SA for experience with MI taking all expenses.
– Making his IPL debut.
– Got the wicket of Ruturaj & Dube.

MI is a factory to Indian cricket.  pic.twitter.com/SvwbX1l6sw

— Johns. (@CricCrazyJohns) March 23, 2025

4  விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி!

டாஸ் வென்ற கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். சென்னை அணியின் சுழற் பந்துவீச்சில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை கொடுத்து வெளியேறினர். 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 158 ரன்கள் மட்டுமே அடித்தது மும்பை அணி. நூர் அகமது நான்கு விக்கெட்களையும், கலில் அகமது மூன்று விக்கெட்களையும் வீழ்த்தி அசத்தியிருந்தனர்.

எளிய இலக்கை எதிர்த்து ஆடிய சென்னை அணிக்கு தொடக்கம் சிறப்பாக இருந்தது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக விளையாடி 53 ரன்கள் அடித்தார். 10 ஓவரில் கிட்டத்தட்ட 100 ரன்கள் அடித்திருந்தாலும், இலக்கை எட்ட கடைசி ஓவர் வரை தேவைப்பட்டது. காரணம் மிடில் ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணியின் சுழற் பந்துவீச்சாளர்களும் சிறப்பாக பந்து வீசினர். இறுதியில் 19.1 ஓவரில் சென்னை அணி 158 ரன்கள் அடித்து இந்த போட்டியில் வெற்றி பெற்றது. ரச்சின் ரவீந்திரா கடைசி வரை அவுட் ஆகாமல் 45 பந்தில் 65 ரன்கள் அடித்திருந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.