ஆர்சிபி அணிக்கு இந்த முறை கோப்பையை பெற்று தரப்போகும் 4 வீரர்கள்!

கடந்த 17 வருடங்களாக ஐபிஎல் கோப்பையை வெற்றி பெற போராடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி,  இந்த ஆண்டு தனது முதல் போட்டியை வெற்றியுடன் துவங்கி உள்ளது. கொல்கத்தா அணிக்கு எதிரான தனது முதல் போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுள்ளனர். கடந்த முறை சாம்பியன் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸை அவர்களது சொந்தம் மைதானத்தில் வைத்து வீழ்த்தியுள்ளனர். இதனால் ஆர்சிபி அணியின் ரசிகர்கள் இந்த முறை எப்படியாவது கோப்பையை வென்று விடலாம் என்ற உற்சாகத்தில் உள்ளனர். இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ஆர்சிபி அணி ஒரு சில வீரர்களை தவிர, மொத்த அணியையும் மாற்றி உள்ளது. இது அணிக்கு பலத்தை அதிகரித்துள்ளது. ஆர்சிபி அணியில் இடம் பெற்றுள்ள பின்வரும் 4 வீரர்கள் இந்த முறை விராட் கோலிக்காக கோப்பையை வென்று தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜத் பட்டிதார்

பாப் டூ பிளசிஸ் இல்லாத நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் புதிய கேப்டனாக ரஜத் பட்டிதார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பெரிதாக கேப்டன்சி அனுபவம் இல்லாத இவர் முதல் போட்டியில் சிறப்பாக பங்கு பெற்று அணியின் வெற்றிக்கு உதவினார். மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்களை சிறப்பாக கையாளும் திறன் கொண்ட ரஜத் பட்டிதார், இந்த ஆண்டு விராட் கோலிக்காக கோப்பையை வென்று தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரசிகர்கள் மத்தியிலும் இவர் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

பில் சால்ட்

இங்கிலாந்து அணியின் ஓப்பனிங் வீரரான பில் சால்ட் இந்த ஆண்டு ஆர்சிபி அணியில் இணைந்துள்ளார். கடந்த ஆண்டு வரை கொல்கத்தா அணிக்கு சிறப்பாக விளையாடி வந்த இவரை ஏலத்தில் 11.50 கோடி கொடுத்து ஆர்சிபி அணி எடுத்துள்ளனர். இவ்வளவு விலை கொடுத்து எடுத்ததற்கு முதல் போட்டியிலேயே தனது அதிரடியை காட்டினார் பில் சால்ட். இவரின் சிறப்பான பேட்டிங் காரணமாக கொல்கத்தா அணியை வீழ்த்தி ஆர்சிபி வெற்றி பெற்றது. இந்த ஆண்டு சிறப்பாக விளையாடிக் கூடிய வீரர்களில் பில் சாட்டும் உள்ளார்.

டிம் டேவிட்

ஆஸ்திரேலியா அணியின் ஆல் ரவுண்டரான டிம் டேவிட் கடந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். இந்த முறை ஏலத்தில் ஆர்சிபி அணி அவரை மூன்று கோடிக்கு எடுத்துள்ளது. முதல் போட்டியில் இவர் விளையாடவில்லை என்றாலும், ஆர்சிபி அணிக்காக இந்த முறை கோப்பையை வெல்ல அதிகம் உழைப்பாளர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமான கட்டத்தில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் இவரால் உதவ முடியும்.

ஜோஷ் ஹேசில்வுட்

ஆஸ்திரேலியா அணியின் முக்கிய வேகப் பந்துவீச்சாளரான ஜோஷ் ஹேசில்வுட் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பிறகு டி20 கிரிக்கெட்டில் இடம் பெற்றுள்ளார். கொல்கத்தா அணிக்கு எதிரான முதல் போட்டியிலேயே பவர் பிளேயில் சிறப்பாக பந்து வீசி இருந்தார். ரூ. 12.50 கோடிக்கு ஏலத்தில் இவரை ஆர்சிபி அணி எடுத்தது. இவ்வளவு பெரிய தொகையை ஈடு கட்டும் வகையில் சிறப்பாக பந்து வீசியிருந்தார். ஆர்சிபி அணி இந்த முறை கோப்பையை வெல்ல ஜோஷ் ஹேசில்வுட் அதிகம் உதவுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பவர் பிளே மற்றும் டெத் ஓவர் என அனைத்து இடங்களிலும் சிறப்பாக பந்து வீசக்கூடிய திறன் கொண்டவர் ஜோஷ் ஹேசில்வுட்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.