இடஒதுக்கீடு வழங்க இந்திய அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படும் என்று நான் கூறியதாக சொல்வதில் உண்மையில்லைஎன்று கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கூறியுள்ளார். முஸ்லிம்களுக்கு 4% இடஒதுக்கீடு வழங்க அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்போவதாக டி.கே. சிவகுமார் கூறியதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு இன்று (திங்கட்கிழமை) மக்களவையில் தெரிவித்தார். இதனால் காங்கிரஸ் மற்றும் பாஜக உறுப்பினர்களிடையே மோதல் ஏற்பட்டது. ரிஜிஜுவின் இந்த பேச்சுக்கு மறுப்பு தெரிவித்துள்ள டி.கே. சிவகுமார் “விரக்தியடைந்த பாஜகவும் அதன் மாநில மற்றும் […]
