புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் முதல்வர் மோகன் சரண் மாஜி தலைமை யிலான பாஜக அரசு ஆட்சியில் உள்ளது. இங்கு பல மாவட்டங் களில் தங்கப் படிமங்கள் இருப் யது முதல் முறையாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சட்டப்பேரவை யில் கடந்த வியாழக்கிழமை பேசிய சுரங்கத் துறை அமைச் சர் பிபூதி பூஷண் ஜெனா கூறியதாவது: ஒடிசாவின் சுந்தர்கர், நபாரங் பூர், அங்குல், கோராபுட் மாவட் உங்களில் ஏராளமான தங்கப் வடிமங்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக தங்கப் படிமங்களை தோண்டி எடுப்பதற்கான ஏலம் தியோகர் பகுதியில் விடப்பட உள்ளது.
மேலும், கியோன்ஞ்சர், மயூர் பஞ்ச் போன்ற இடங்களில் தங் கப் படிமங்கள் இருக்கின்றனவா என்பதை அறிய அகழ்வாய்வுகள் நடக்கின்றன. தவிர மால்கன்கிரி, சம்பல்பூர், போத் போன்ற மாவட் டங்களிலும் தங்கப் படிமங்கள் குவிந்து கிடப்பது முதல் கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மயூர்பஞ்ச் பகுதியில் உள்ள ஜஷிபூர், சரியாகுடா, ருவான்சி, ஐடெல்குச்சா, மரிதிஹி, சுலிபட், பதம்பஹத் போன்ற இடங்களை யும் உள்ளடக்கி ஆய்வுகள் நடத் தப்பட்டு வருகின்றன. கியோன்ஞ் கர் பகுதியில் எந்தளவுக்கு தங்கப் படிமங்கள் உள்ளன என்பதை அறிவதற்கான ஆய்வுகள் தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றன.
தற்போதைய கண்டுபிடிப்பு மூலம் தங்கச் சுரங்கத்தின் கேந் திரமாக ஒடிசா மாநிலம் மாறும். அதன்மூலம் மாநில பொருளா தாரம் கணிசமாக அதிகரிக்கும். தவிர சில இடங்களில் தாமிர தாதுக்கள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து ஓடின மாநில அரசு முதல் முறையாக தங்கச் சுரங்கங்களுக்கு ஏலம் விட திட்டமிட்டுள்ளது.
இது ஓடிசா சுரங்கத் துறை வரலாற்றில் புதிய மைல்கல்லாக இருக்கும். இதன்மூலம் மாநில பொருளாதாரம் உயர்வதுடன், முதலீடுகளையும் ஒடிசா மாநிலம் ஈர்க்கும். புதிய வேலைவாய்ப்பு கள் உருவாகும். ஏலம் விடப்பட் டவுடன், இந்திய தங்கச் சுரங்கத் துறையில் ஒடிசா மாநிலம் மிக முக்கிய பங்கு வகிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.