சென்னை தி.நகர் தெற்கு உஸ்மான் சாலையில் சி.ஐ.டி. நகரில் இருந்து வடக்கு உஸ்மான் சாலை கோட்ஸ் சாலை சந்திப்பு வரை மேம்பால பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதில் வடக்கு உஸ்மான் சாலையின் கோட்ஸ் சாலை சந்திப்பில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் வரை ஏற்கனவே மேம்பாலம் உள்ளது. தெற்கு உஸ்மான் சாலையில் சி.ஐ.டி. நகரில் இருந்து 1.2 கிலோ மீட்டர் நீளத்திற்கு இரும்பு பாலம் அமைத்து தற்போதுள்ள பாலத்துடன் இணைப்பது குறித்து 2021-2022 […]
