சென்னை,
10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். திருவிழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில் கொல்கத்தாவில் நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியை வீழ்த்தி பெங்களூரு அசத்தல் வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில் இந்த தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் 5 முறை சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன .இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.அதன்படி மும்பை அணி முதலில் பேட்டிங்செய்தது.
தொடக்கத்தில் ரோகித் சர்மா கலீல் அகமது பந்துவீச்சில் டக் அவுட் ஆனார்,. தொடர்நது ரிக்கல்டன் 13 ரன்களில் வெளியேறினார் . தொடர்ந்து வில் ஜேக்ஸ் 11 ரன்களில் வெளியேறினார். பின்னர் சூர்யகுமார் யாதவ் ,, திலக் வர்மா இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடினர்.
சூர்யகுமார் யாதவ் 29 ரன்களும், திலக் வர்மா 31 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து வந்த வீரர்கள் சென்னை பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 9விக்கெட் இழப்பிற்கு மும்பை அணி 155 ரன்கள் எடுத்தது . சென்னை அணியில் சிறப்பாக பந்துவீசிய நூர் அகமது 4விக்கெட்டுகளும் , கலீல் அகமது 3விக்கெட்டுகளும்எடுத்தனர் . தொடர்ந்து 156ரன்கள் இலக்குடன் சென்னை அணி விளையாடுகிறது