6G Technology: உலகை மாற்றும் ஆற்றல் கொண்ட 6G… பந்தயத்தில் முந்தும் நாடுகள் எவை?

தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. 3ஜி, 4ஜி மற்றும் 5ஜிக்கு பிறகு பல நாடுகள் தற்போது 6ஜி தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன. வயர்லெஸ் தகவல்தொடர்புக்கான 6G தொழில்நுட்பத்தின் உதவியுடன், தற்போதைய செல்லுலார் மற்றும் இணைய சேவைகள் வியக்கதக்க முன்னேற்றத்தை காண்பதோடு மட்டுமல்லாமல், தொழில்நுட்பத்தின் உதவியுடன் வியக்கத்தக்க அளவில் மிக விரைவாக தொடர்பு கொள்ள முடியும்.

6ஜி என்றால் என்ன?

6G தொழில்நுட்பம் அடுத்த தலைமுறை தொழில்நுட்பமாகும், இது முற்றிலும் வயர்லெஸ் தொழில்நுட்பம் ஆகும். இந்த தொழில்நுட்பத்தின் உதவியுடன், மொபைல் இணையத்தை புதிய நிலைக்கு கொண்டு செல்ல இது உதவும். 5G தொழில்நுட்பத்தின் வருகைக்குப் பிறகு, இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

6G தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் முக்கியத்துவம்

6ஜி தொழில்நுட்பம் துறைகளில் புரட்சிகரமான மாற்றங்களை கொண்டு வர முடியும். 6ஜி வளர்ச்சிக்குப் பிறகு மருத்துவத் துறையில் சிகிச்சைக்கான கூடுதல் வசதிகள் கிடைக்கும். இது தவிர வணிகம், கல்வி, பொழுதுபோக்கு, வேளாண் ஆகிய துறைகளிலும் பெரிய மாற்றங்களைக் காணலாம். 6G வந்த பிறகு, 4K திரைப்படத்தைப் பதிவிறக்க 1 வினாடிக்கும் குறைவாகவே ஆகலாம்.

சர்வதேச சமூக ஒழுங்குமுறை தரநிலைகள்

சீனா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் இந்தியாவுடன், பிற நாடுகளும் 6G தொழில்நுட்பத்தை உருவாக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. 6G தொழில்நுட்பத்திற்கான சர்வதேச சமூக ஒழுங்குமுறை தரநிலைகள் குறித்தும் விவாதிக்கப்படுகின்றன. இருப்பினும், 5ஜி தொழில்நுட்பம் இன்னும் பல நாடுகளுக்கு முழுமையாக சென்றடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

 6G தொழில்நுட்பம் வணிக ரீதியாக கிடைப்பது எப்போது?

6ஜி தொழில்நுட்ப வளர்ச்சியில் சீனா வேகமாக செயல்பட்டு வருகிறது. 6G உலகளவில் வெளிவருவதற்கு, சமூக ஒழுங்குமுறை தரநிலைகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். ITU (சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம்) 2030 ஆம் ஆண்டுக்குள் 6G தரநிலைகளை அமைக்க விரும்புகிறது. இதன் மூலம் 6G தொழில்நுட்பம் இந்த தசாப்தத்தின் இறுதியில் உலகளவில் வணிக ரீதியாக கிடைக்கும் என கூறப்படுகிறது.

6G தொழில்நுட்ப வளர்ச்சி

உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான 5G அடிப்படை நிலையங்களை சீனா கொண்டுள்ளது. இது தவிர, ஜப்பான் மற்றும் தென் கொரியா 6G தொழில்நுட்ப வளர்ச்சியில் மிகவும் தீவிரமாக இருப்பதாக தெரிகிறது. பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளின் ஆபரேட்டர்கள் 6G தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான அதிக முக்கியமான பரிந்துரைகளை வழங்கவில்லை.

6G தொழில்நுட்ப சோதனைகள்

ஸ்வீடிஷ் தொலைத்தொடர்பு நிறுவனமான எரிக்சன், 2028 முதல் 6G க்கான வணிகத்திற்கு முந்தைய சோதனைகள் தொடங்கலாம் என கூறுகின்றன. தென் கொரியாவுடன் அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளும் 6ஜி நெட்வொர்க்கை வழங்குவதற்கு முயற்சி செய்து வருகின்றன.

சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம்

சீனா ஏற்கனவே 6G தொழில்நுட்பத்தை கொண்டு வரும் முயற்சியில், சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் (ITU) ஒத்துழைப்புடன் 2024ம் ஆண்டில் 6Gக்கான மூன்று தொழில்நுட்ப தரநிலைகளை நிறுவியுள்ளது. மேலும், இந்த ஆண்டு சீனாவின் தேசிய வளர்ச்சி இலக்குகளில் எதிர்காலத்திற்காக 6G தொழில்நுட்பத்தை உருவாக்குவதும் அடங்கும். இதன்படி, 6ஜி மேம்பாட்டிற்கான பந்தயத்தில் சீனா முன்னணியில் இருப்பதாகத் தெரிகிறது.

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.