CSK vs MI: “அலப்பறை கிளப்புறோம்; சேப்பாக்கத்தில் பெர்ஃபாம் செய்வது என்னுடைய கனவு!'' – அனிருத்

சென்னை மற்றும் மும்பை அணிக்கு இடையேயான ஐ.பி.எல் போட்டி நேற்றைய தினம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது. இந்த சீசனில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டி இதுவென்பதால் தொடக்க விழாவுக்கு அனிருத்

CSK vs MI
CSK vs MI

பெர்பாமென்ஸை சிறப்பு நிகழ்வாக ஒருங்கிணைத்திருந்தார்கள் . அனிருத்தின் மாஸ் எலிவேஷன் பாடல்கள் பலவும் இங்கு இசைக்கப்பட்டது. அனிருத்தின் இந்த பெர்பாமென்ஸை அரங்கில் இருந்தவர்களுக்காக மட்டுமே பிரத்யேகமாக அரங்கேற்றியிருந்தார்கள்.

தற்போது இது குறித்து அனிருத் பேசியிருக்கும் காணொளியை ஐ.பி.எல்-ன் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். இந்தக் காணொளியில் அனிருத், “சென்னைக்காரனாக சேப்பாக்கம் மைதானத்தில் பெர்பாம் செய்வது என்னுடைய கனவு. தோனி சென்னையின் மகனைப் போன்றவர். தொடக்கத்திலிருந்து நான் எம்.எஸ். தோனியின் மிகப்பெரிய ரசிகன். `ஜெயிலர்’ திரைப்படத்திற்காக ஹுக்கும் பாடலை இசையமைத்தபோது இந்தப் பாடல் ரஜினி சாருக்கானது என பாடலாசிரியரிடம் கூறினேன்.

Anirudh at Chepauk
Anirudh at Chepauk

அதே சமயம், இந்தப் பாடலை தோனி மைதானத்திற்குள் என்ட்ரிக் கொடுக்கும்போது ஒலிக்க வேண்டும் எனக் கூறினேன். கடந்தாண்டு இந்தப் பாடலை ஒலிக்கச் செய்தபோது மக்களிடமிருந்து எப்படியான வரவேற்பு கிடைத்தது என்பதை பார்த்திருந்தோம். `பட்டாசை தயாராக வைத்துக் கொள்ளுங்கள்’ என்பதுதான் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு இந்த 18-வது சீசன் பற்றி நான் சொல்லும் மெசேஜ். அலப்பறை கிளப்புறோம்!” எனப் பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.