Khaleel Ahmed: `பந்தை சேதப்படுத்த முயன்றாரா கலீல் அஹமது?' – பரவும் வீடியோவும் லாஜிக்கும்

சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கிடையேயான போட்டி நேற்று நடந்திருந்தது. அந்தப் போட்டியின்போது சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அஹமது கையில் எதோ ஒரு பொருளை வைத்து பந்தை சேதப்படுத்த முயன்றதாக ஒரு வீடியோ இணையத்தில் சுற்றி வருகிறது. இந்த விவகாரத்தில் உண்மை என்ன?

Khaleel Ahmed
Khaleel Ahmed

கலீல் பந்தை சேதப்படுத்த முயல்வதாக பரவிக் கொண்டிருக்கும் வீடியோ முதல் ஓவரின்போது நடந்த சம்பவம். முதலில் ஒரு விஷயத்தை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். பந்து புதியதாக பளபளவென இருக்கும்போது அதை எந்த வீரரும் சேதப்படுத்த முயலமாட்டார்கள். ஏனெனில் பந்து புதிதாக இருக்கும்போது பௌலர்களுக்கு ஸ்விங் கிடைக்கும். பந்தை மூவ் செய்து பேட்டர்களை திணறடிக்க முடியும். அப்படியிருக்கும்போது மறைத்து மறைத்து பந்தை சேதப்படுத்தி ரிவர்ஸ் ஸ்விங்கை கொண்டு வர அவசியமே இல்லை.

பந்து கொஞ்சம் பழையதான பிறகு அதன் பொலிவை இன்னும் இழக்கச் செய்யும் வகையிலேயே பந்தை எதாவது சொரசொரப்பான பொருளைக் கொண்டு சேதப்படுத்த நினைப்பார்கள். வீடியோவில் இருப்பது முதல் ஓவரில் நடந்த சம்பவம் என்பதால், கலீல் எதாவது பொருளைக்கொண்டு பந்தை சேதப்படுத்தியிருக்க வாய்ப்புக் குறைவு. அந்தக் குற்றச்சாட்டில் லாஜிக்கும் இல்லை.

கலீல் வருகின்றனர்.கையில் மாட்டியிருந்த மோதிரத்தைதான் பாக்கெட்டுக்குள் போட்டார். கையிலிருந்த பேண்ட் எய்டை கழற்றி வைத்தார் என கலீலுக்கு ஆதரவாகவும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்த உங்கள் கருத்தை கமென்ட்டில் பதிவிடுங்கள்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.