Samsung Galaxy A26: Samsung போன் அறிமுகம்.. எந்த மாடல்? என்ன விலை?

Samsung Galaxy A26: சாம்சங் நிறுவனம் தற்போது இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போந ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. பட்ஜெட் விலையில் அற்புதமான பிராண்ட் ஸ்மார்ட்போன் வாங்க நீங்கள் நினைத்துக் கொண்டு இருந்தால் இந்த சாம்சங் தரமான தேர்வாகும். இதில் சிறப்பு என்னவென்றால் இந்த ஸ்மார்ட்போன் சாம்சங்கின் இன்-ஹவுஸ் சிப்செட் Exynos 1380 உடன் வருகிறது.

சாம்சங் வெளியிட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் Galaxy A26 5G ஆகும். இந்த Samsung Galaxy A26 5G ஸ்மார்ட்போன் ஆனது Android 15 அடிப்படையிலான One UI 7.0 இல் இயங்குகிறது. இந்த போன் IP67 மதிப்பீட்டில் வருகிறது, அதாவது இனி தூசி அல்லது தண்ணீரில் போன் விழிந்தால் கவலைப் பட தேவையில்லை.

Samsung Galaxy A26 5G அம்சங்கள்:
Samsung Galaxy A26 5G ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பற்றி பேசுகையில், Samsung Galaxy A26 5G ஆனது 6.7-இன்ச் FHD+ Infinity-U சூப்பர் AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது.

இந்த ஸ்மார்ட்போனில் (Samsung Galaxy A26 5G) கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் (Corning Gorilla Glass Victus+) பாதுகாப்பு காணப்படும். இதன் காரணமாக மொபைல் ஸ்கிரீன் பாதுகாப்பாக இருக்கும்.

அதுமட்டுமின்றி இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டோ கோர் எக்ஸிநோஸ் 1380 (Octa Core Exynos 1380) சிப்செட் வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இதில் மாலி – ஜி68 எம்பி5 ஜிபியு (Mali-G68 MP5 GPU) கிராபிக்ஸ் கார்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனை 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் வாங்க முடியும். இது தவிர, மைக்ரோ SD கார்டின் உதவியுடன் போனின் சேமிப்பிடத்தை 2TB வரை அதிகரிக்கலாம். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த சாம்சங் ஸ்மார்ட்போன்.

இந்த ஸ்மார்ட்போனின் கேமரா பற்றி பேசுகையில், இந்த ஸ்மார்ட்போனில் 50MP பிரைமரி கேமரா + 8MP அல்ட்ரா வைடு கேமரா + 2MP மேக்ரோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் உள்ளன. அதேபோல் 5000mAh பேட்டரி மற்றும் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இந்த போனில் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போனை நீங்கள் கருப்பு, புதினா, வெள்ளை மற்றும் பீச் வண்ண விருப்பங்களுடன் வாங்கலாம்.

Samsung Galaxy A26 5G விலை:
Samsung Galaxy A26 5G இன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் மாறுபாட்டின் விலை ரூ.24,999. 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் மாறுபாட்டின் விலை ரூ.27,999 ஆகும். இந்த போனை நீங்கள் பிளிப்கார்ட், சாம்சங் இந்தியா ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கடைகளிலிருந்து வாங்கலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.