ஃபோக்ஸ்வேகன் இந்திய சந்தையில் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியிட உள்ள டிகுவான் ஆர்-லைன் எஸ்யூவி மாடலுக்கான முன்பதிவை துவங்கியுள்ள நிலையில் 2.0 லிட்டர் TSI டர்போ பெட்ரோல் எஞ்சின் உடன் 6 விதமான நிறங்களில் கிடைக்க உள்ளது.
சிப்ரெசினோ கிரீன் மெட்டாலிக், நைட்ஷேட் ப்ளூ மெட்டாலிக், கிரெனடில்லா பிளாக் மெட்டாலிக், ஓரிக்ஸ் ஒயிட் மதர் ஆஃப் பெரல் எஃபெக்ட், ஆய்ஸ்டர் சில்வர் மெட்டாலிக் இறுதியாக பெர்சிமன் ரெட் மெட்டாலிக் என 6 நிறங்களை பெற்று சர்வதேச அளவில் கிடைக்கின்ற மாடல்களுக்கு இணையான வசதிகளில் எந்த மாற்றமும் இல்லாமல் வரவுள்ளது.
இன்டீரியரில் மிக சிறப்பான டிரைவிங் அனுபவத்தை வெளிப்படுத்தும் வகையிலான ஸ்போர்ட்டிவ் இருக்கைகளுடன், 10.3-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்ப்ளே, மற்றும் 12.9 அங்குல டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் புதிய VW MIB4 OS ஆதரவை பெற்றிருப்பதுடன் பல்வேறு கனெக்ட்டிவிட்டி அம்சங்களை பெற முடியும்.
204hp மற்றும் 320Nm டார்க் வெளிப்படுத்தும் 2.0-லிட்டர் நான்கு சிலிண்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் 7-ஸ்பீடு டூயல்-கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றதாக அமைந்திருக்கும். இந்த காரில் 4Motion AWD சிஸ்டம் பெற்றிருக்கும். மேலும், அதிகபட்ச வேகம் மணிக்கு 229 கிமீ ஆக வெளிப்படுத்தலாம்.
அடிப்படையான பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் ADAS உள்ளிட்ட நவீனத்துவமான வசதிகளை பெற்றதாக விளங்க உள்ளது.
இந்திய சந்தைக்கு வரவுள்ள டிகுவான் ஆர்-லைன் காரை முழுமையாக வடிவமைக்கப்பட்ட மாடலாக ரூ.45 லட்சத்துக்கும் கூடுதலான விலையில் வெளியிடலாம்.